Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் கணவர் இயக்கத்தில் நடிக்க வருகிறார் அமலாபால்

07 ஆக, 2014 - 12:54 IST
எழுத்தின் அளவு:

திருமணத்திற்கு பின் நடிக்க போவதில்லை என முடிவு செய்திருந்த அமலாபால், தனது கணவர் விஜய் இயக்கத்தில் மீண்டும் நடிப்பை தொடர முடிவு செய்துள்ளார்.


விஜய் இயக்கத்தில் தெய்வத் திருமகள், தலைவா படங்களில் நடித்த அமலாபால், அவருடன் ஏற்பட்ட காதலால் கடந்த மாதம் இயக்குஜர் விஜய்யை திருமணம் செய்த கொண்டார். திருமணத்திற்கு முன் அமலாபால் தனுஷூடன் ஜோடி சேர்ந்து நடித்த படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படம் அவரது திருமணத்திற்கு பிறகே ரிலீஸ் செய்யப்பட்டு, சூப்பர் ஹிட் ஆகி உள்ளது.


வேலையில்லாத பட்டதாரி படத்தின் வெற்றி, அமலாபாலுக்கு மீண்டும் நடிப்பாசையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை அறிந்த விஜய்யும் தனது மனைவி மீண்டும் நடிக்க ஓகே கூறிவிட்டாராம். அதன் முதல் முயற்சியாக துபாயைச் சேர்ந்த நகைக்கடையின் விளம்பர தூதராக்கி, அந்த விளம்பர படத்தையும் விஜய்யே எடுக்கிறாராம்.


திருமணத்திற்கு பின் நடிக்க வந்திருக்கும் தான் நடிக்கும் விளம்பர படத்தையும் தனது கணவரே இயக்குவது தனக்கு இரட்டை சந்தோஷத்தை ஏற்படுத்தி இருப்பதாக அமலாபால் தெரிவித்துள்ளார்.மேலும் வேலையில்லாத பட்டதாரி தனக்கு ஏகப்பட்ட பாராட்டுக்களை பெற்று தந்திருப்பதால், அது போன்ற வாய்ப்புக்கள் வந்தால் தான் நடிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in