ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கன்னட நடிகர் கிஷோர் பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்தார். சந்தனக் கடத்தல் வீரப்பனாகவும், ஹரிதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்தது பேசப்பட்டது. தற்போது கிஷோர் இளமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது ஜல்லிக்கட்டு தொடர்பான படமாகும். இந்தக் காலத்து ஜல்லிக்கட்டு வீரராக சாட்டை யுவன் நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக அனுகிருஷ்ணா நடிக்கிறார்.
கதைப்படி சங்க காலத்தில் ஜல்லிகட்டு எப்படி நடந்தது என்கிற பீரியட் பகுதி வருகிறது. இதில் அந்தக் காலத்து ஜல்லிக்கட்டு வீரராகவும், பயிற்சியாளராகவும் நடிக்கிறார் கிஷோர். இதற்காக ஜல்லிகட்டு பயிற்சி எடுத்து வருவதோடு, சங்கத் தமிழ் வார்த்தைகள் நிறைந்த தூய தமிழ் பேசவும் கற்று வருகிறார். படத்தின் வசனத்தை வாங்கி அதனை உச்சரித்து பழகி வருகிறார். விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.