Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படங்களின் வெற்றியில் மீடியாக்களுக்கும் பங்கு உள்ளது! -டைரக்டர் வெற்றி மாறன்

07 ஆக, 2014 - 12:09 IST
எழுத்தின் அளவு:

டைரக்டர் வெற்றி மாறனின் கிராஸ் ரூப் பட நிறுவனம் வெளியிடும் படம் பொறியாளன். இந்த படத்தில் சிந்துசமவெளியில் அமலாபாலுடன் நடித்த ஹரிஸ் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரபுசாலமனின் கயல் படத்தில் நாயகியாக நடிக்கும் ஆனந்தி நடித்துள்ளார்.

இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று மாலை 4 மணி அளவில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. அதில், டைரக்டர்கள் வெற்றி மாறன், மணிமாறன், வேல்ராஜ், தனுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அப்போது படம் பற்றி வெற்றிமாறன் பேசும்போது, இந்த படத்திற்கு எனது நண்பரும், உதயம் என்எச்4 படத்தின் டைரக்டருமான மணிமாறன் கதை திரைக்கதை வசனம எழுத, இன்னொரு நண்பரான தனுகுமார் படத்தை இயக்கியுள்ளார். எனது 20 ஆண்டுகால நண்பர்களான அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் உதவி செய்ய வேண்டுமே என்பதற்காக நட்புக்காக இந்த படத்தை நான் அவர்களிடருந்து வாங்கி, வேந்தர் மூவீஸ் வழியாக வெளியிடுகிறேன்.


தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தைப்போன்று இந்த படமும் ஒரு இஞ்சினியர் சம்பந்தப்பட்ட கதையில்தான் உருவாகியுள்ளது. ஆனால், தனுஷ் படத்திற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது. எளிமையான, யதார்த்தமான படமாக இருக்கும். கட்டிடம் கட்டும் பிரச்சினை என்றாலும் இது வேறுமாதிரியான பிரச்சினைகளை கொண்டதாக அமைந்துள்ளது.


மேலும், இப்போதெல்லாம் ஒரு படம் 2 வாரம் ஓடினாலே சூப்பர் ஹிட் என்கிறார்கள். அந்த அளவுக்கு படங்கள் ஓடும் காலகட்டம் என்பது குறைந்து விட்டது. அதோடு இப்போது சின்ன படம் பெரிய படம் என்பதெல்லாம் இல்லை. படம் பிடித்து விட்டால் ரசிகர்கள் வரவேற்கிறார்கள். அதனால்தான் பல சின்ன படங்கள் பெரிய படங்களாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த பொறியாளனும் இடம் பெறும்.


அதுமட்டுமின்றி, தற்போது படங்களின் வெற்றிக்கு கதைகள் மட்டுமின்றி மீடியாக்களின் பங்கும் அவசியமாகிறது. ஒரு படத்தை அவர்கள் நல்ல படம் என்று சொன்னால் அப்படங்களின் வெற்றி உறுதியாகிறது. அதனால இந்த நல்ல படத்தையும் ஆதரியுங்கள். மக்களிடம் கொண்டு சேருங்கள்.


இவ்வாறு வெற்றி மாறன் பேசினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in