ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கும்கி படத்தில் அறிமுகமானபோதே "நான் எந்த மொழியில் நடித்தாலும் ஒரு மலையாளியைத்தான் காதலித்து திருமணம் செய்வேன்" என்று அன்று அதிரடியாக அறிவித்தவர் லட்சுமிமேனன். 9வது வகுப்பு படிக்கும்போது இப்படி அதிரடியாக அறிவித்தவர் இப்போது "திருமணமே செய்து கொள்ள மாட்டேன்" என்று திடீர் முடிவெடுத்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் திருமணமே செய்து கொள்வே மாட்டேன். கல்யாணம் பண்ணிக்காமலேயே எத்தனையோ பேர் இருக்காங்களே. அவர்களெல்லாம் சாதிக்கவில்லையா?. அப்படி நானும் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே சாதிப்பேன். எனக்குப் பிடிச்ச ஹீரோ சித்தார்த்துடன் நடித்து விட்டேன். அடுத்து விஜய், அஜீத்துடன் நடிக்கணும், மலையாளத்தில் மோகன்லாலுடன் நடித்து விட்டேன். அடுத்து மம்முட்டியுடன் நடிக்க வேண்டும் இப்படி அடுத்தடுத்து நிறைய கனவுகள் இருக்கிறது. என்கிறார் லட்சுமி மேனன்.