பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபகாலமாக படங்களின் பப்ளிசிட்டிக்காக ஏதாவது பரபரப்பான செய்திகளையோ, போட்டோக்களையோ வெளியிட்டு சர்ச்சைகளை உருவாக்கி வருகிறார்கள் சினிமாத்துறையினர். அந்த வகையில், பிரபல ஹீரோக்கள் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்களை பொது இடங்களில் ஒட்டக்கூடாது என்கிற சட்டம் இருந்தும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தின் பப்ளிசிட்டிக்காக அவர் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்களை தமிழகமெங்கிலும் ஒட்டி விளம்பரம் தேடிக்கொண்டனர்.
அதேபோல் பி.கே என்ற இந்தி படத்தில் விளம்பரத்திற்காக அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸரில், சன்னி லியோனைப்போன்று நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார், அமீர்கான். மும்பையிலுள்ள செய்திதாள்களில் அந்த விளம்பரங்கள் வெளியானதையடுத்து, ஒரு சமூக ஆர்வலர் அமீர்கான் மற்றும் அப்படக்குழுவினர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து டர்ட்டி பாலிடிக்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்துள்ள மல்லிகா ஷெராவத், தேசிய கொடியை இடுப்பில் கட்டியபடி ஒரு காட்சியில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியானதை அடுத்து வியாபார நோக்கத்தில் தேசிய கொடியை அவமதிக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும். அதோடு அந்த படத்தையும் தடை செய்ய வேண்டும் என்றும் மும்பை நீதிமனறத்தில் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இநத பரபரப்பான சூழ்நிலையில் மத்திய அரசின் செயலாளர், மல்லிகா ஷெராவத் மற்றும் அப்பட தயாரிப்பாளருக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாராம். இதனால் டர்ட்டி பாலிடிக்ஸ் படம் திரைக்கு வருவதில் ஏகப்படட சிக்கல் உருவாகியிருக்கிறது.