Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வி.ஐ.பி. வீட்டுப்பிள்ளைகளுக்கு மட்டுமே உதவி இயக்குநர் வாய்ப்பு!

05 ஆக, 2014 - 15:33 IST
எழுத்தின் அளவு:

கோடம்பாக்கத்தில் ஹீரோ சான்ஸ் கூட சுலபத்தில் கிடைத்துவிடும். உதவி இயக்குநராக வேலைக்கு சேருவதுதான் கஷ்டமோ..கஷ்டம். ஒரு காலத்தில் திறமையை மட்டுமே கருத்தில் கொண்டு உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டார்கள் பிரபல இயக்குநர்கள். இப்போதெல்லாம் திறமைக்கு மதிப்பே இல்லை. சம்மந்தப்பட்ட இயக்குநரிடம் அவருக்கு வேண்டியப்பட்டவர்கள் யாராவது சிபாரிசு செய்தால்தான் உதவி இயக்குநராகவே சேர்த்துக்கொள்கிறார்கள். இந்த சூட்சுமம் தெரியாமல் தினமும் இயக்குநர்களின் அலுவலகத்துக்கு படை எடுத்துக்கொண்டும், அவர்களின் அலுவலக வாசலில் மணிக்கணக்கில் நின்று கொண்டும் எத்தனையோ பேர் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.


சில இளம் இயக்குநர்கள், தன்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வருபவர்களை கேவலமாக நடத்துவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். ஒரு இயக்குநர் என்ன செய்தார் தெரியுமா? உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்ட வந்தவர்களுக்கு தேர்வு நடத்தினார். அதாவது பரீட்டை வைத்து, கடைசியில் யாரும் பாஸாகவில்லை என்று அனுப்பி வைத்தார். இன்னொரு இளம் இயக்குநர் 100 பேர் வரை இண்டர்வ்யூ வைத்து யாரும் சரியில்லை என்று திருப்பி அனுப்பினார்.


உதவி இயக்குநர்களை தேர்வு செய்வதில் வெற்றி இயக்குநர், ஒரு பாணியை பின்பற்றி வருகிறார். அதாவது வி.ஐ.பி.வீட்டுப்பிள்ளைகளை மட்டுமே அவர் உதவி இயக்குநராக வைத்துக்கொள்கிறார். இவர்களை வேலைக்கு வைத்தால் சம்பளம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. இயக்குநர்கள் வசந்த், ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரது மகன்கள், இசையமைப்பாளர் தரணின் தம்பி என இந்த இயக்குநரிடம் உதவியாளராக உள்ள அனைவருமே வி.ஐ.பி.வீட்டு பிள்ளைகள்தான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in