ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரசன்னா, சினேகா நடித்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தை இயக்கியவரும் பிரசன்னா, லேகா வாஷிங்டன் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான 'கல்யாண சமையல் சாதம்' படத்தைத் தயாரித்தவருமான அருண் வைத்தியநாதன், மோகன் லால் கதாநாயகனாக நடிக்கும் 'பெருச்சாழி' படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் பெரும்பகுதி அமெரிக்காவில் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது.
'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தை இயக்கிய பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டாவது படத்தை இயக்கியுள்ளார் அருண், அதுவும் மலையாளத்தில். இந்தப் படத்தில் முகேஷ் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஒரு அரசியல் நையாண்டிப் படம். ஏப்ரல் மாதம் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று கடந்த மாதம் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவில் நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடந்தாலும் திட்டமிட்டபடி படத்தை முடித்திருக்கிறார்கள். மோகன்லால் நடித்துள்ள வித்தியாசமான படங்களின் பட்டியலில் இந்தப் படம் இடம் பெறும் என்று இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஓணம் பண்டிகை அன்று இப்படம் வெளிவர உள்ளது.
மலையாள இயக்குனர்கள் தமிழில் வெற்றி பெற்று வந்த காலம் மாறி, இனி தமிழ் இயக்குனர்கள் மீண்டும் மலையாளத்திலும் சாதனை புரிய இந்தப் படம் நல்ல வாய்ப்பாக அமையும் என்கிறார்கள்.