இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
யார் இந்த தீக்ஷா சேத் என கண்டிப்பாக கேட்பீர்கள். சுசீந்திரன் இயக்கத்தில் விக்ரம் நடித்த 'ராஜ பாட்டை' படத்தின் ஹீரோயின்தான் இவர். தெலுங்கில் சில வெற்றிப் படங்களில் நடித்த பின் தமிழுக்கு அறிமுகமானார். இவருடைய போதாத காலம் அப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன், அவர் இயக்கிய படங்களின் பட்டியலைச் சொல்லும் போது கண்டிப்பாக மறைக்கும் படமாக 'ராஜ பாட்டை' அமைந்து விட்டது. அந்த அளவிற்கு மிகவும் மோசமான ஒரு தோல்விப் படமாக 'ராஜா பாட்டை' அமைந்ததால் அழகிருந்தும், திறமையிருந்தும் தீக்ஷா சேத்தால் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க முடியாமல் போய் விட்டது. ஒரு அழகான நடிகையை தமிழுக்குக் கொண்டு வந்து உடனே விரட்டிய பாவம் சுசீந்திரனைச் சேர்ந்துவிட்டது.
இருந்தாலும் தனது முயற்சியில் சிறிதும் தளராக தீக்ஷா சேத், பாலிவுட்டில் 'லெகர் ஹம் தீவானா தில்' என்ற படம் மூலம் அறிமுகமானார். கடந்த மாதம் வெளியான அந்தப் படம் ஒரு தோல்விப் படமாகவே அமைந்து விட்டது. இருந்தாலும் விமர்சகர்களால் தீக்ஷா சேத்தின் நடிப்பு பாராட்டப்பட்டது. தற்போது புதிய வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். நடிப்புக்கு மொழி முக்கியம் என்பதை ஹிந்திப் படத்தில் நடிக்கும் போதுதான் உணர்ந்து கொண்டாராம். “ ஆரம்ப காலத்தில் நான் நடிக்க வந்த போது என்னிடம் டயலாக் பேப்பர்களைக் கொடுத்து விட்டு, அடுத்த ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஷாட் ரெடி என்பார்கள். அப்போது டயலாக்கை ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ மாற்றி எழுதி வசனம் பேசுவேன். ஆனால், ஹிந்திப் படத்தில் நடித்த போது மூன்று பக்க டயலாக்கைக் கூட ஐந்து நிமிடத்தில் பேசிவிடுவேன். அப்போதுதான் நடிப்புக்கு மொழி எவ்வளவு முக்கியம் என்பது புரிந்தது, ” என்கிறார்.
நடிக்க வந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் இன்னும் தமிழ் பேசத் தெரியாத நடிகைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் காதுகளுக்கு தீக்ஷா சேத் சொன்னது சென்று சேர்ந்தால் நன்றாக இருக்கும்.