பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'பூ' படத்தில் அறிமுகமான பார்வதி, தன் பெயருடன் 'மேனன்' என்ற தன் ஜாதி பெயரை இணைத்துக் கொள்ளாமல் தான் அறிமுகமானார். 'மரியான்' படத்தின் ஆடியோ விழாவில், தன்னை மேடையில் பார்வதி மேனன் என்று அழைத்தபோது, 'அப்படி அழைக்க வேண்டாம், பார்வதி என்று மட்டுமே சொன்னால் போதும்' என்று கேட்டுக்கொண்டார். ஆனால், இப்போது அவரே விரும்பாத போதும், அவர் நடித்து வரும் படங்களில் பார்வதி மேனன் என்றே அவரது பெயரை விளம்பரம் செய்கின்றனர். இதனால், தான் நடித்து வரும் பட நிறுவனங்களை தொடர்பு கொண்டு, 'என் பெயரில் ஜாதியை குறிப்பிட வேண்டாம். பார்வதி என்றுமட்டுமே குறிப்பிடுங்கள். ஜாதியை அடையாளமாகவோ, தகுதியாகவோ,ஒருபோதும் நான் நினைக்கவில்லை' என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.