சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
80களில் தமிழ்நாட்டையே கிரங்க வைத்த சில்க் -ஸ்மிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை சோகமும், ரகசியமும் நிறைந்தது. அதனை இந்தியில் டர்ட்டி பிக்சர்ஸ் என்ற பெயரில் எடுத்தார்கள். சில்க் ஸ்மிதாவாக நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருதும் கிடைத்து. மலையாளத்தில் கிளைமாக்ஸ் என்ற பெயரில் எடுத்தார்கள். அதனையே தமிழில் ஒரு நடிகையின் டயரி என்ற பெயரில் வெளியிட்டார்கள் சனா கான் நடித்திருந்தார். கன்னடத்தில் சில்க் என்ற பெயரிலியே எடுத்தார்கள்.
தற்போது சிலக் ஸ்மிதாவின் வாழ்க்கையை மராட்டிய மொழியில் எடுக்கிறார்கள். பேஜ் 3, டிராபிக் சிக்னல் படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய சமீர்கான் என்பவர் இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: "மற்ற மொழிகளில் வெளிவந்த சில்க் ஸ்சுமிதாவின் வாழ்க்கை படங்கள் சில விஷங்களை மட்டுமே தொட்டுச் சென்றன. ஆனால் அவரது வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாக இருந்து சொல்லப்போகிறேன். இதற்கான ஸ்கிரிப்டை சில்க் ஸ்மிதாவின் உறவினர்களிடம் காட்டி தடையில்லா கடிதம் வாங்கி விட்டேன்.
சில்க் ஸ்மிதாவின் பாசிட்டிவான விஷயங்களும், அவரை பற்றிய தப்பான அபிப்ராயங்களுக்கு விடை சொல்லும் விதமாகவும் படம் இருக்கும். பிரபல மராட்டிய நடிகை நடிக்கிறார் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது" என்கிறார் சமீர்கான்.