மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
செய்தியின் இடையில் நாட்டின் தட்பவெப்ப நிலையை சொல்லும் 50 விநாடி தொகுப்பாளராக அறிமுகமான மோனிகா, இப்போது 3வயது ஜேடனின் தாய். தற்போது தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். சினிமா நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருக்கிறார். மகனை கவனிக்க வேண்டியது இருப்பதால் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: தெய்வம் தந்த வீடு நிஜமாகவே தெய்வம் எனக்கு தந்த சீரியல் மோனிகாங்ற பேர் மறைந்து இப்போ எல்லோரும் கல்பனான்னுதான் கூப்பிடுறாங்க. சீரியல்ல என்னோட அம்மாவா நடிக்கிற சுதா சந்திரன் மேடம் என்னை தன்னோட சொந்த மகளாக நினைக்கிறாங்க. வெளியூர் போய்விட்டு வந்தால் எனக்கு ஏதாவது பரிசு பொருள் வாங்கிட்டு வருவாங்க. திருமணமாகி பிரிஞ்சு போற சீன்ல ரெண்டு பேரும் நிஜமாவே அழுதுட்டோம்.
முன்பு மாத்தில் 15 நாள் நடிச்சிட்டிருந்தேன். இப்போது மகன் ஜேடன் ஸ்கூலுக்கு போக ஆரம்பிச்சிருக்கான். அவனை கவனிக்க வேண்டியது இருப்பதால் மாதத்துக்கு ஒரு வாரமா நடிக்கிறதை குறைச்சிட்டேன். என்கிறார் மோனிகா.