மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
இயக்குனர் நந்தா பெரியசாமி தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு இயக்குனர். காரணம் அவரது முதல் படமான ஒரு கல்லூரியின் கதை ரிலீசுக்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆர்யா, சோனியா அகர்வால் நடித்தனர். ஒரு விபத்தில் நினைவிழந்த ஒருவனை அவனது கல்லூரிக்கு அழைத்துச் சென்று கல்லூரி கால கலாட்டாவை மீண்டும் நடத்தி காட்டி குணப்படுத்துகிற கதை. எதிர்பார்க்கப்பட்ட படம் எதிர்பாராத தோல்வியை தழுவியது. அதன் பிறகு நந்தா பெரியசாமி இயக்கிய மாத்தியோசி என்ற படமும் தோல்வி அடைந்தது. கடைசியாக அழகன் அழகி என்ற படத்தை இயக்கினார். அது படுதோல்வி அடைந்தது. இடையில் சில படங்களில் நடிக்கவும் செய்தார்.
இப்போது மீண்டும் ஜிகினா என்ற படத்தை இயக்குகிறார். இதனை நந்தா பெரிய சாமியின் ரூம் மெட் இயக்குனர் லிங்குசாமி துவக்கி வைத்தார். இதில் விஜய் வசந்த், சானியா தாரா நடிக்கிறார்கள். பாலாஜி ரங்கா ஒளிப்பதிவு செய்கிறார், ஜான் இசை அமைக்கிறார். சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ராகுல் பிக்சர்ஸ் சார்பில் கே.டி.கே தயாரிக்கிறார். இந்த படத்தில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று கடுமையாக உழைக்கிறார் நந்தா பெரியசாமி.