வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான கிக் படம் 100 கோடி வசூலித்து சாதனை புரிந்துள்ளது அதனால் ரம்ஜானை உற்சாகமாக கொண்டாடியுள்ளார் அவர். அதோடு, இந்த மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளுக்கு தான் சிகிச்சை அளிக்கப்போவதாகவும் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
பீயிங் ஹயூமன் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை தொடங்கியிருக்கும் அவர், தன்னிடம் மருத்துவ உதவி பெற விரும்புவோர். சமூக வலைதளத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார். சல்மான்கானின் இந்த அறிவிப்பை அடுத்து ஏராளமானோர் உதவி கேட்டு தங்களது பெயர்களை பதிவு செய்து வருகிறார்களாம்.
ஆனால் அப்படி பதிவு செய்யும் அனைவருக்கும் உடனடியாக அவர் உதவி செய்யப்போவதில்லையாம். சமீபகாலமாக இணையதள மோசடிகள் நிறைய நடந்து கொண்டிருப்பதால், தன்னிடம் உதவி கேட்ட அத்தனை பேரின் தகவல்களையும் சேகரித்துக்கொணடு அவர்களைப்பற்றிய முழு விவரங்களையும் அறிந்த பின்னரே முறையான சிகிச்சை கொடுக்கப்போகிறாராம் சல்மான்கான்.