'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மிர்சி செந்தில், விஜயலட்சுமி நடித்த வெண்ணிலா வீடு படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கிறது. ஆதர்ஷ் ஸ்டூடியோ தயாரித்த இந்தப் படத்தை பிரபல டிசைனிங் நிறுவனமான தி வைப்ரண்ட் மூவீஸ் வாங்கி உள்ளது. இதனை வெற்றி மகாலிங்கம் இயக்கி உள்ளார். தன்ராஜ் மாணிக்கம் என்பவர் இசை அமைத்துள்ளார். விஜயலட்சுமியுடன் சிருந்தா ஆசாப் என்ற மலையாள நடிகையும் நடித்துள்ளார்.
படத்தின் புரமோசனுக்காக "ஜானி ஜானி வா மாமா..." என்ற பாடலை சமீபத்தில் வெளியிட்டனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இணைய தளத்தில் 10 லட்சம் பேர் வரை பார்த்துள்ளனர். இதனால் இந்தப் பாடலை கடைசி நேரத்தில் படத்தில் சேர்த்துள்ளனர். கிராமத்து பெண்ணான விஜயலட்சுமி நகர்புறத்துக்கு திருமணமாகி வருகிறார். இங்குள்ள அடுக்குமாடி கலாச்சாரத்தில் அவர் படும் அவஸ்தைகளும், தவணைக்கு பொருட்கள் வாங்கி தடுமாறும் செந்திலின் அவஸ்தைகளும்தான் படத்தின் கதை. இந்தப் படத்திலிருந்து மிர்சி செந்தில் என்ற தனது பெயரை செந்தில்குமார் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார் செந்தில். திருமணத்துக்கு பிறகு செந்தில் நடித்து வெளிவந்த பப்பாளி மக்களுக்கு ருசிக்கவில்லை. இந்த வெண்ணிலா வீடாவது பிடிக்குமா என்று ஆவலுடன் காத்திருக்கிறார் செந்தில்.