ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் பிரியாணி. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இது அவரது 100வது படமாகும். அதையடுத்து இப்போது சூர்யாவின் அஞ்சான் மற்றும் தரமணி, வானவராயன் வல்லவராயன் உள்பட சில படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.
அதோடு, இந்தியிலும் ஒரு படத்துக்கு இசையமைத்துள்ள யுவன், இனி தமிழ்,. இந்தி என இருவழிப்பாதையில் தான் பயணிக்கப்போவதாகவும் கூறி வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் முஸ்லீம் மதத்துக்கு மாறிய யுவன், அதை வெளி உலகத்துக்கு தெரியாமல் வைத்திருந்தார். ஆனால் அவர் அடிக்கடி மசூதிகளுக்கு சென்று வந்தது வெளியில் கசிந்தது.
அதையடுத்து, தான் மதம் மாறியதை அவரே ஒத்துக்கொண்டார். இந்த நிலையில், நேற்று ரம்ஜான் என்பதால், தொழுகை நடத்தி விட்டு வந்த யுவன், தனது குடும்பத்தினர் அனைவருக்கும் பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார். இந்த விருந்தில் அவரது உறவினர்கள் பலரும் கலந்து கொண்டார்களாம்.