Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

கமர்சியல் ரேட்டிங்கை உயர்த்த போகிறேன்! - சுனைனா பேட்டி

29 ஜூலை, 2014 - 23:15 IST
எழுத்தின் அளவு:

சினிமாவுல நான் பர்பாமென்சுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிச்ச படங்கள் எனக்கு கை கொடுக்கல. அதனால் பக்கா கமர்சியல் படங்கள்ல நடிச்சு என்னோட கமர்சியல் ரேட்டிங்கை உயர்த்த போறேன் என்கிறார் சுனைனா. தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...

* சுனைனாவோட சினிமா கேரியர் எப்படி போய்க்கிட்டிருக்கு?

எப்பவும் போலவே இப்பவும் நல்லாதான் போய்க்கிட்டிருக்கு. தமிழ், தெலுங்குன்னு ரெண்டு மொழியிலயும் பிசியாக இருக்கேன். தமிழில் வரிசையாக நடிச்சிக்கிட்டு இருக்கிறப்ப தெலுங்குல நடிக்காத மாதிரி இருக்கும். தெலுங்குல தொடர்ந்து நடிக்கிறப்ப தமிழ்ல கேப் விழுந்த மாதிரி இருக்கும். ஆனா என்னைப்பொறுத்தவரை பிசியாக நடிச்சிக்கிட்டு இருக்கேன். அப்புறம், சமர் படத்துல நடிக்கிற வரைதான் நான் சுனைனா. இப்ப அனுஷாவா மாறிட்டேன். அதனால் என்னை அனுஷான்னே கூப்பிடலாம்.

* ஏற்கனவே பெரிய அளவுல ரீச்சான சுனைனாவ அவ்ளோ சுலபமா ரசிகர்களோட உச்சரிப்புல இருந்து மாத்திட முடியுமா?

கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா, அந்த பெயரை உச்சரிச்சா என்னோட பியூச்சர் ப்ரைட்டா இருக்கும்னு என்னோட குடும்ப ஜோதிடர் சொல்லியிருக்காரு. அதனால் எல்லாரும் அப்படி கூப்பிட்டா எனக்கும், என் கேரியருக்கும் நல்லதுன்னு நான் நெனைக்கிறேன்.

* அப்படின்னா நீங்க தெறமையை விட அதிர்ஷ்டத்தைதான் நம்புறீங்களா?


சினிமாவுல சாதிக்கனும்னா திறமைதான் முக்கியம். அதோட நல்ல ரோல் கிடைக்கனும். அப்பத்தான் ஒரு ஆர்ட்டிஸ்ட் சாதிக்க முடியும். அப்படி பாத்தா தமிழ்ல காதலில் விழுந்தேன் படத்துல அறிமுகமான எனக்கு வம்சம், நீர்ப்பறவை படங்கள்ல ரொம்ப நல்ல ரோல் கெடைச்சுது. ஆனா நான் எதிர்பார்த்த மாதிரி பெரிய படங்கள் கெடைக்கல. அதுதான் வருத்தம். அதனால்தான் எல்லோரையும் போல நானும் அதிர்ஷ்டத்தை நம்ப ஆரம்பிச்சிட்டேன்.

இதேமாதிரிதான் தெலுங்குலயும், வித்தியாசமான நான் நடிச்ச படங்கள்கூட என்னை பேச வைக்கல. அதனால்தான் பெயர்கூட வளர்ச்சிக்கு ஒரு தடையா இருக்குமோன்னு நெனச்சு அனுஷான்னு மாத்திருக்கிறேன். சுனைன்னா தராத வளர்ச்சியை அனுஷா தருவாளான்னு காத்துக்கிட்டிருக்கேன்.

* ஸ்ரீகாந்தோட நடிச்சிருக்கிற நம்பியார் படத்துல உங்க ரோல் எப்படி?


ஸ்ரீகாந்த் எம்ஜிஆர் மாதிரி ரோல்ன்னா நான் சரோஜாதேவி மாதிரி, சந்தானம் நம்பியார் ரோல். ஆக, பழைய படங்களோட கேரக்டர்கள்ல ஒரு புதுமாதிரியான படத்தை இப்போதைய டிரண்டுக்கு கொடுத்திருக்கோம். எனக்கு இந்த படத்துலயும் வித்தியாசமான மாடர்ன் ரோல்தான். பர்பாமென்ஸ் மட்டுமில்லாம, பாடல் காட்சிகள்ல என்னை அழகா காண்பிச்சிருக்காங்க. எப்பவும் போலவே இந்த படத்துலயும் இளவட்ட ரசிகர்களின் மனச நான் இதமா வருடியிருக்கேன். என்னை கண்டிப்பாக படம் பார்க்க வர்றவங்க ரசிப்பாங்க.

இதே மாதிரிதான் கிருஷ்ணாவுக்கு ஜோடியா நடிக்கிற வன்மம் படத்திலேயும் ரொம்ப நல்ல ரோல்தான். இந்த ரெண்டு படமும் எனக்கு தமிழ்ல ஒரு நல்ல இடத்தை பிடிச்சி தரும்னு எதிர்பார்க்கிறேன்.

* உங்க சினிமா கேரியர்ல நீர்ப்பறவை முக்கியமான படம்னு சொல்லலாமா?


கட்டாயமா சொல்லலாம். ஏன்னா, அதுல எஸ்தர்ங்கிற கதாபாத்திரமாவே நான் மாறி நடிச்சேன். அந்த அளவுக்கு என்னோட கேரக்டரை செதுக்கியிருந்தாரு டைரக்டர் சீனுராமசாமி. ஆனா அப்படி என்னை பேச வச்ச படத்துக்கு பிறகு தமிழ்ல புதிய படங்கள் கெடைக்காதது எனக்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது. அந்த ஏமாற்றத்துக்கு பிறகுதான் பெயரையே நான் மாத்த முடிவு செஞ்சேன்.

* ஸ்ரீகாந்த்தோட உங்க கெமிஸ்ட்ரி எப்படி?


ரொம்ப நல்லா ஒர்க்அவுட்டாகியிருக்கு. கதைப்படி அவர் எம்ஜிஆர் மாதிரி ஹீரோவா இருக்கிறப்ப, சரோஜாதேவியானா என்கூட நல்ல ரொமான்ஸ் செஞ்சிக்கிட்டிருப்பாரு. ஆனா, அவருக்குள் இருக்கிற நம்பியார் என்கிற சந்தானம் வெளியே எட்டிப்பார்க்கும்போது வில்லனா மாறிடுவாரு. அது ஒரு பெரிய கதை. அதை இப்ப நான் சொல்ல முடியாது. படம்தான் சொல்லணும்.

* விஷாலோட, சமர்ல சின்ன ரோல் நடிச்ச நீங்க முழு படத்துலயும் வர்ற மாதிரி நடிக்க ட்ரை பண்றீங்களா?

அந்த படத்துல சின்ன வேடத்துக்கு என்னை கமிட் பண்ணினப்ப, அடுத்ததாக மெயின் ஹீரோயினா நடிக்கிற மாதிரி சான்ஸ் தர்றேன்னுதான் சொன்னாரு. ஆனா இதுவரைக்கும் கண்டுக்கல. சினிமாவுல நமக்கு மார்க்கெட் இல்லேன்னா கண்டுக்க மாட்டாங்க. அதனால் நான் இதை பெருசா எடுத்துக்கல. அதேமாதிரி பரத்தோடு திருத்தணி படத்துல பக்கா கமர்சியல் நடிகையா நடிச்சேன். அதனால் இனிமே அந்த மாதிரி கதைகள்ல அதிகமா நடிச்சு என்னோட கமர்சியல் ரேட்டிங்க உயர்த்த போறேன்.

* கமர்சியல் நடிகைன்னா துக்கடா டிரஸ் போட்டுக்கனுமே?

ஆடை விசயத்தைப்பொறுத்தவரை ஒரு லிமிட் வைச்சுதான் நடிப்பேன். ஆனா, ஏற்கனவே பாண்டி ஒலிபெருக்கி நிலையம் படத்துல நான் நீச்சல் உடை அணிந்து நடிச்சிருக்கேன். அதனால் மறுபடியும் நடிக்கிறதுல எந்த ஆட்சேபனையும் இல்ல. அதோட, முத்தக்காட்சிகளிலும் தேவைப்பட்டால் நடிக்க தயாராக இருக்கேன் எனக்கு நடிக்க நல்ல ஸ்கோப் இருந்தா கமர்சியல் காட்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்.

* மும்பை நடிகையான நீங்க இதுவரை உங்க தாய்மொழியில நடிக்கலையே?

மகாராஷ்டிராவுல நாக்பூர்தான் என்னோட சொந்த ஊர். ஆனா நான் சம்திங் ஸ்பெசல்ங்கிற தெலுங்கு படத்துலதான் 2006-ல அறிமுகமானேன். அதுக்கப்புறம் தமிழுக்கு வந்திட்டதாலே, இந்திக்கு போக முடியல. ப்யூச்சர்ல சான்ஸ் வந்தா இந்தியிலேயும் நடிப்பேன். இன்னும் இரண்டொரு வருசத்துக்கு அப்புறம் அதுக்கான முயற்சி எடுப்பேன் என்கிறார் அனுஷா என்கிற சுனைனா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in