‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! |
கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 55வது படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வருகிறது. ஆரம்பத்தில் அஜீத்துடன் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கிய கெளதம், இப்போது த்ரிஷாவுடன் அஜீத் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார். கதைப்படி இப்படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் த்ரிஷா. அதனால் அஜீத் மற்றும் அவருக்கு மகளாக நடிக்கும் அனிகாவுடன் த்ரிஷா நடிக்கும் காட்சிகளும் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை அம்மா வேடங்களில் நடித்திராத த்ரிஷா, முதன்முறையாக அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதால் சில டேக்குகளை வாங்கினாலும், எதிர்பார்த்தபடி நடித்து கைதட்டல் வாங்குகிறாராம்.
மேலும், இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் தலைவாசல் விஜய் நடிக்கிறார். இவர் அஜீத் நடித்த காதல் கோட்டை உள்பட சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்தவர். அதனால் ஒரு செண்டிமென்டடுக்காக கடைசி நேரத்தில் அவரையும் அழைத்து ஒரு ரோல் கொடுத்திருக்கிறார்களாம். பல வருட இடைவேளைக்குப்பிறகு, திடீரென்று அஜீத் செய்த சிபாரிசின் பேரில் இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்ததால் சந்தோசத்தில் தடுமாறிப்போனாராம் தலைவாசல் விஜய்.