ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவைப்பொறுத்தவரை சோனாவை ஒரு கவர்ச்சி நடிகையாகவே பார்த்து வருகிறது. அதற்கு காரணம் ஆரம்பத்தில் அவர் பத்து பத்து, குசேலன் உள்ளிட்ட சில படங்களில் கிளாமர் வேடங்களில்தான் நடித்தார். அதற்கு அவரது உடலமைப்பு கச்சிதமாக பொருந்தியதால் தொடர்ந்து அதே கோணத்தில் டைரக்டர்கள் அவருக்கு சான்ஸ் கொடுத்து வந்தனர்.
ஆனால், மலையாள டைரக்டர்களோ சோனாவை பர்பாமென்ஸ் நடிகையாக பார்க்கிறார்கள். முக்கியமாக ப்ரியதர்ஷன், கே.கே.ஹரிதாஸ் போன்ற இயக்குனர்கள் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சோனா. அதாவது, ப்ரியதர்ஷன் தான் இயக்கும் ஆமையும் முயலும் என்ற படத்தில் சோனாவுக்கு படம் முழுக்க வரும் ஒரு கேரக்டரை கொடுத்துள்ளாராம். அந்த கதையை கேட்ட சோனா, இது என் திரைவாழ்வில் மைல்கல் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
இதேபோல்,. மலையாள டைரக்டர் ஹரிதாஸ் இயக்கும் திலீப் விவாஹிதனயாள் என்ற படத்தில் இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் நடிக்கிறாராம். அதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறதாம். இதனால், எனது திறமையை அறிந்து சான்ஸ் தராத தமிழ் சினிமாவே எனக்கு இனி தேவையில்லை என்று சொல்லிக்கொண்டு கேரளாவில் தற்போது முகாமிட்டுள்ள சோனா, தன்னை அடுத்த ஷகீலா போன்று யாரும் பயன்படுத்தி விடக்கூடாது என்பதிலும் படு உஷாராக இருக்கிறாராம்.