சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
வருடத்திற்கு 200 படம் வெளிவருவதால் எந்த வகையிலாவது வித்தியாசமாக படம் எடுத்து மற்றவர்களை கவர நினைக்கிறார்கள், அதற்காக வித்தியாசமாகவும் யோசிக்கிறர்கள். விபரீதமாகவும் யோசிக்கிறார்கள், அந்த வரிசையில் வருகிறது லட்டுக்குள்ள பூந்தி பூந்தி.
அதாவது, இந்த படத்தில் பெண்கள் அனைவரும் ஆண்களாகவும். ஆண்கள் அனைவரும் பெண்களாகவும் நடிக்கிறார்கள், கிரண்மை என்ற பெண் கதையின் நாயகன். ஜூன்ஸ் என்ற ஆண் நாயகி, இவர்கள் தவிர நடித்திருக்கும் அனைவருமே பால் மாறி நடித்திருக்கிறார்கள்.
ஏன் இந்த விபரீத முயற்சி என்பதற்கு இயக்குனர் ஜூன்ஸ் தரும் விளக்கம் இதுதான்.... லட்டு உலகம் என்றால் அதற்குள் இருக்கும் பூந்திதான் ஆண்களும் பெண்களும், பல பூந்திகள் சேர்ந்துதான் லட்டு. அது மாதிரி ஆணும். பெண்ணும் சேர்ந்தால்தான் உலகம். இந்த தத்துவத்தை மையமாக வச்சுதான் படம்.
உலகத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் ஒரே நாளில் பெண்ணாகவும். பெண்கள் எல்லாம் ஆணாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன், படத்தை எடுத்தேன். பெண்களும். ஆண்களும் தோற்றத்தில் அப்படியேதான் இருப்பார்கள், அவர்களின் குணங்களும். செயல்பாடுகளும் மாறி இருக்கும், உலக சினிமா வரலாற்றிலேயே இரண்டரை மணி நேர படம் முழுவதும் ஆண் பெண்ணாகவும். பெண் ஆணாவும் நடிக்கிற படம் இதுதான். என்கிறார் ஜூன்ஸ்.