மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சில வருடங்களுக்கு முன்னர் தமிழ்த் திரையுலகில் பெரும்பாலான படங்களின் தலைப்பு ஆங்கிலத்தில் வைக்கப்பட்டது. அதன் பின் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்படும் படங்களுக்கு வரிவிலக்கோ, அரசு உதவித் தொகையோ கிடையாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர்தான் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டது தவிர்க்கப்பட்டு, தமிழில் பெயர் வைக்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு மொழிப் பற்றுள்ளவர்களாக நம்மவர்கள் இருந்தனர். தற்போது மலையாளத் திரையுலகிலும் அதே பிரச்னை எழுந்துள்ளது.
சமீபகாலமாக மலையளத் திரையுலகில் பெரும்பாலான படங்களின் தலைப்பு ஆங்கிலத்தில்தான் வைக்கப்பட்டு வருகிறது. இதுநாள் வரை அங்கு யாரும் இதைக் கண்டு கொள்ளாமல் இருந்தனர். பிரபல கதாசிரியரான அடூர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழு கேரள அரசுக்குச் சமர்ப்பித்த அறிக்கையில் இந்த தலைப்புப் பிரச்சனை பற்றி கடுமையாக சொல்லப்பட்டுள்ளதாம். “பெங்களூர் டேய்ஸ், ஹெவ் ஓல்ட் ஆர் யு, ஆங்கிரி பேபிஸ் இன் லவ், செவன்த் டே, ஒன் டே ஜோக்ஸ், பிவேர் ஆப் டாக்ஸ், மை லைப் பார்ட்னர், மை டியர் மம்மி, காட்ஸ் ஓன் கன்ட்ரி, லா பாயின்ட், பிரைஸ் த லார்ட், ஹேப்பி ஜர்னி, பிளாக் பாரஸ்ட்” என பல படங்களுக்கு ஆங்கிலப் பெயர்களைத்தான் வைத்திருந்தார்கள். இதில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களும் அடங்கும்.
2010ம் ஆண்டிலிருந்து இதுவரை வெளிவந்துள்ள 552 மலையாளப் படங்களில் 234 படங்கள் ஆங்கிலப் பெயர் கொண்ட படங்களாம். 18 படங்கள் மலையாளம், ஆங்கிலம் கலந்து பெயர் வைக்கப்பட்ட படங்களாம். 37 படங்களின் பெயர்கள் சில மொழிகளின் கலப்புப் பெயர்களாம். நம்ம ஊரில் தமிழ், இங்கிலீஷ் கலந்து பேசுபவர்களைப் பார்த்து 'தங்கிலீஷ்' பேசுகிறவர்கள் என கமெண்ட் அடிப்பார்கள். அது போல மலையாளம், இங்கிலீஷ் கலந்து பேசினால் 'மங்கிலீஷ்' தானே. இப்படிக் கூட ஒரு படத்திற்கு தலைப்பு வைத்து விட்டார்கள், அதுவும் மம்முட்டி நடிக்கும் படம். சில நாட்களுக்கு முன்னர்தான் இந்தப் படம் வெளிவந்தது.
மொழியை வளர்க்க சட்ட திட்டம் போடும் நிலை வந்துவிடும் போல...!