மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
தமிழில் கமலஹாசன் போன்று பாலிவுட்டில் முத்த ஸ்பெஷலிஸ்ட் இம்ரான் ஹாஷ்மி. முத்தத்திற்கும் அவர் ஒரு பாசிலி வைத்திருக்கிறார். அதாவது அவர்தான் ஹீரோயினுக்கு முத்தம் கொடுப்பார், ஹீரோயின் அவருக்கு கொடுப்பதை அனுமதிக்க மாட்டார். தற்போது அவர் நடித்து வரும் ராஜா நட்வர்லால் படத்தில் புதுமுக ஹீரோயின் ஹிமைமா அவருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கிற மாதிரி சீன். இதில் நடிக்க முதலில் இம்ரான் மறுத்துள்ளார். பிறகு இயக்குனர் கெஞ்சி கேட்டு ஒப்புக்கொள்ள வைத்தார். பிறகு இன்னொரு காட்சியில் இம்ரான் ஹிமைமாவை முத்தமிடுவது போன்று காட்சியை எடுத்தார்கள்.
"இரண்டு முத்தக் காட்சியையும் போட்டு பார்த்ததில் இரண்டுமே ஒன்றுபோல இருந்தது. ஒருவர் முத்தம் கொடுக்க இன்னொருவர் ஆர்வம் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இருவரும் ஒரே நேரத்தில் பீலிங்கோடு முத்தம்கொடுக்க வைத்து படம் பிடித்தோம் என்று பெருமை பொங்கச் சொல்கிறார் இயக்குனர் குணால் தேஷ்முக். இயக்குனர் செய்த குழப்பத்தால் இம்ரான் காட்டில் முத்த மழைதான்.