மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
வளர்ந்து வரும் இளம் நடன இயக்குனர் அனுஷா ஸ்வாமி. கோச்சடையான், வேட்டைக்காரன், வேலாயும், எங்கேயும் காதல் உள்ளட பல படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். பிரபு தேவா இயக்கும் அத்தனை இந்திப் படங்களுக்கும் இவர்தான் நடன இயக்குனர். தற்போது உலக புகழ்பெற்ற இசை கலைஞர் ஆகோன் உருவாக்கி வரும் ஒரு இசை ஆல்பத்தில் நடனம் ஆடியிருக்கிறார். உலகின் பல்வேறு பாகங்களைச் சேர்ந்த நடன கலைஞர்கள் இந்த ஆல்பத்தில் ஆடியுள்ளனர். அதில் இந்தியாவின் சார்பில் ஆடியிருக்கிறார் அனுஷா.
இதுபற்றி அவர் கூறியதாவது: 6 வயதிலிருந்தே நடனம் கற்று வந்திருக்கிறேன். வெம்பட்டி சின்ன சத்யம், எம்.வி.என்.மூர்த்தி மாஸ்டர்களிடம் முறையான நடனம் கற்றேன். பரதம், குச்சிபுடி, கதக், சல்சா, ஹிப்பாப், என எல்லா நடனத்தையும் கற்று தேர்ந்தேன். இதுவரை 500க்கும் மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறேன். 20க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறேன். கோச்சடையான் படத்தில் ரஜினி சாரை ஆடவைத்தபோது என்னை மனதார பாராட்டினார். அதுதான் எனக்கு ஆஸ்கர் விருது. தற்போது ஆகோனின் இசை ஆல்பத்தில் ஆட வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். எனக்கு இது சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் என்று நம்புகிறேன். என்கினார் அனுஷா.