பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பூ, மரியான் படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை பார்வதி மேனன் தற்போது கமல் நடித்து வரும் உத்தமவில்லன் படத்தில் ஜெயராமுக்கு மகளாக நடித்துள்ளார். சிறிய வேடம் என்றாலும் கமல் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த படத்தில் நடித்திருப்பதாக சொலலும் பார்வதி, அடுத்தடுத்து கதாநாயகி வேடம் இல்லை என்றாலும், வித்தியாசமான ரோல்கள் கிடைத்தாலும் நடிப்பதற்கு தயாராகி விட்டாராம்.
அந்த வகையில, மலையாளத்தில் பகத்பாசில, துல்கர் சல்மான், நஸ்ரியா நடிப்பில் வெளியான பெங்களூர் டேஸ் படத்தில் பார்வதியும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தாராம். அந்த படம் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து தற்போது தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. இதன் தமிழ்ப்பதிப்பில் சித்தார்த், ஆர்யா, சமந்தா ஆகியோர் நடிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால், மலையாளத்தில் பார்வதி மேனன் நடித்த வேடத்தில் தமிழில் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். அதனால், அந்த வாய்ப்பு மீண்டும் எனக்கு கிடைத்தால் மலையாளத்தில் நடித்ததை விடவும் சிறப்பாக நடிப்பேன் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறி வரும் பார்வதி மேனன், அப்படத்தை தயாரிக்கும் பிவிபி சினிமா நிறுவனத்தை அணுகி சான்ஸ் கேட்கவும் திட்டமிட்டுள்ளாராம்.