‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான படம் பெங்களூர் டேஸ். அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குனரின் படம். பகத் பாசில், நஸ்ரியா, துல்கர் சல்மான் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இந்திய மொழிகளில் ரீமேக் செய்ய பிவிபி சினிமா உரிமம் பெற்றுள்ளது. தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறது. இதனை பிரபல தெலுங்கு இயக்குனர் பொம்மரிலு பாஸ்கரன் இயக்குவார் என்று தெரிகிறது. தமிழில் ஆர்யாவும், தெலுங்கில் நாக சைதன்யாவும் நடிக்கிறார்கள், இரண்டு மொழிக்கும் அறிமுகமான சித்தார்த் பகத் பாசில் கேரக்டரிலும், சமந்தா நஸ்ரியா கேரக்டரிலும் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்துள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்புகள் தொடங்குகிறது.