இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஆர்ட் ரைடக்டர்களிலிருந்து லைட் பாய் வரைக்கும் நடிகராத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து நடிகராகி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ். ராமன் தேடிய சீதை, பொக்கிஷம், வந்தேமாதரம் உள்பட ஏராள மான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள அவர் திலகர் படத்தின் மூலம் நடிகராகியிருக்கிறார். வில்லத்தனமான ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
"நடிக்கிற ஆசையெல்லாம் எனக்கு இல்லை. நான் திலகர் படத்தோட கேமராமேன்தான். ஒரு நாள் டைரக்டர் வந்து இதுல ஒரு பவர்புல்லான போலீஸ் கேரக்டர் இருக்கு நீங்கதான் நடிக்கிறீங்கன்னு சொல்லி யூனிபார்மை கொடுத்திட்டார். சின்ன கேரக்டர்தானேன்னு ஒத்துக்கிட்டேன். அப்புறம் என்னோட நடிப்பை பார்த்துட்டு சீனை அதிகமாக்கி பெரிய கேரக்டரா மாத்திட்டாங்க. நடிப்பு என் தொழில் இல்லை. ஒரு மாறுதலுக்காக பண்ணியிருக்கேன் அவ்ளோதான்" என்கிறார் ராஜேஷ் யாதவ்.