Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வரூபம்-2 எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்! கமல் வெளியிட்ட தகவல்!!

26 ஜூலை, 2014 - 12:18 IST
எழுத்தின் அளவு:

கமலின் விஸ்வரூபம் படம் பல தடைகள், சர்ச்சைகளை தாண்டி வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தை எடுத்து வந்தபோது இரண்டாம் பாகத்துக்கு தேவையான பெரும்பாலான காட்சிகளையும் அதே படப்பிடிப்பு தளங்களில் படமாக்கி விட்டார் கமல். அதனால்தான், முதல் பாகத்திலேயே இரண்டாம் பாகம் தொடரும் என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல், அப்படத்தையும் உடனடியாக தொடங்கினார் கமல். முதல் பாகத்தை தானே தயாரித்தவர், இரண்டாம் பாகத்தில் ஆஸ்கர் பிலிம்சுடன் கூட்டணி வைத்துக்கொண்டார். பல மாதங்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிந்து, அப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் வேலைகள் சில மாதங்களாக நடந்து கொண்டிருக்கிறது.


இந்த நிலையில, அதன்பிறகு கமல் நடிக்கத் தொடங்கிய உத்தமவில்லன் படப்பிடிப்பும் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதனால், விஸ்வரூபம்-2 படத்திற்கு முன்பே உத்தமவில்லன் திரைக்கு வந்துவிடும் என்று செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், இதுகுறித்து தற்போது கமல் வெளியிட்டுள்ள செய்தியில், விஸ்வரூபம் படத்தை விட இரண்டாம் பாகத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால் இறுதி கட்ட பணிகளில் கூடுதலான பிரமாண்டத்தை இணைத்து வருகிறோம். அதனால் தான் இவ்வளவு காலதாமதம். ஆனபோதும், உத்தமவிலல்னுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே கூட விஸ்வருபம்-2 திரைக்கு வந்து விடும் என்கிறார்.


அது எப்போது என்று கேட்டால், எப்போது வேண்டுமானாலும் ரிலீசாகலாம். அடுத்த மாதமோ அல்லது அதற்கடுத்த மாதமோகூட இருக்கலாம். ஆனால் விஸ்வரூபம்-2 வெளியான பிறகுதான் உத்தமவில்லன் வெளிவரும் என்கிறார் கமல்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in