ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராதாமோகன் இயக்கிய 'கௌரவம்' படத்தில் நாயகியாக நடித்த நடிகை யாமி கௌதம். தற்போது சில இந்திப் படங்களிலும், தமிழ், தெலுங்கில் நீண்ட நாட்களாகத் தயாராகி வரும் 'தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும்' படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு இந்திப் படத்தில் நடிப்பதற்காக ஸ்க்ரீன் டெஸ்ட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார். படத்தில் இடம் பெறும் ஒரு முக்கிய காட்சியில் 'பிகினி' உடையணிந்து நடிக்க வேண்டுமாம். அதற்காக அந்த ஆடையை அணிய வைத்து ஸ்க்ரீன் டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள். ஆனால், திருப்தியடையாத படப்பிடிப்புக் குழுவினர், அவர் பொருத்தமாக இல்லை எனச் சொல்லி அந்தப் படத்தில் அவரை நடிக்க வைக்க வேண்டாமென முடிவு செய்துவிட்டார்களாம்.
இந்தக் காலத்தில் ஒரு நடிகை 'பிகினி' உடையணிந்து நடிப்பதற்கு சம்மதிப்பதே பெரிய விஷயம். அப்படியிருக்க பிகினி உடையணிந்தாலும், அதில் பொருத்தமாக இல்லை என யாமியை திருப்பியனுப்பிய சம்பவம்தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம். இப்போது அவருக்குப் பதிலாக லிசா ஹைடன் அந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். தான் இந்தியில் அறிமுகமான 'விக்கி டோனர்' படத்திலேயே சிறந்த நடிப்பிற்காக பாராட்டப்பட்டவர் யாமி என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தற்போது சில இந்திப் படங்களில் நடித்து வருவதால், அவர் இந்த 'பிகினி' பட வாய்ப்பைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள்.