அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' | 'ஆடு' படத்தின் மூன்றாம் பாகம் அறிவிப்பு | அனுபம் கெர் படத்திற்கு இசையமைக்கும் மரகதமணி | சூர்யாவின் 'புறநானூறு' தள்ளிப் போகிறதா? | ராம்சரணை தொடர்ந்து கியாரா அத்வானியின் கேரக்டர் லுக்கும் லீக் ஆனது |
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கென்று சில நண்பர்கள் இருப்பார்கள். பிற்காலத்தில் அவர்கள் காமெடி நடிகர்களாகோ அல்லது ஹீரோக்களாகவோ மாறுவார்கள். சந்தானம், ஜெய், சூரி, கருணாகரன், விஜய்சேதுபதியெல்லாம் ஹீரோவின் நண்பர்களாக இருந்து வந்தவர்கள்தான். அதே மாதிரி ஹீரோயின்களுக்கும் தோழிகள் இருப்பார்கள். அவர்கள் காமெடி நடிகையாகவோ அல்லது ஹீரோயினாகவோ மாறுவார்கள். தோழியாக இருந்து ஹீரோயின் ஆனவர்களில் த்ரிஷா முக்கியமானவர். அந்த வழியில் இப்போது ஹீரோயின் ஆகியிருக்கிறார் மிஷா கோஷல்.
இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்தவர். கடைசியாக ராஜா ராணி படத்தில் நயன்தாரா தோழியாகவும், வடகறி படத்தில் ஸ்வாதி தோழியாகவும் நடித்தார்.
தற்போது மூச் என்ற படத்தின் ஹீரோயின் ஆகிவிட்டார். பாரதிராஜாவின் உதவியாளர் வினுபாரதி இயக்குகிறார், பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். நித்தின் என்ற புதுமுகம் ஹீரோ. "இது திகில் படம் இரண்டு குழந்தைகளுக்கு ஒரு பேயும், தாயும் உரிமை கொண்டாடுகிறார்கள். இறுதியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை" என்கிறார் வினுபாரதி.