தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மான்கராத்தே என கோலிவுட்டில் அவ்வப்போது குத்துச்சண்டையை மையப்படுத்திய கதைகள் வந்து கொண்டிருக்கின்றன.மேலும், வடசென்னையைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர்களை மையப்படுத்திய கதைகளில் ஜெயம்ரவி நடித்துள்ள பூலோகம் படம் விரைவில வெளிவர தயார் நிலையில் உளளது.
ஆனால், கோலிவுட்டைப் பொறுத்தவரை குத்துச்சண்டை கதைகளில் ஹீரோக்கள்தான் நடித்துள்ளனர். ஆனால், பாலிவுட்டில் கதாநாயகிகளும் ஆக்சன் கதைகளில் நடிப்பதுண்டு. அந்த வகையில், பிரபல இந்திய குத்துச்சண்டை வீராங்கணை மேரிகோமின் வாழ்க்கையை மையப்படுத்திய கதை ஒன்றில் பிரியங்கா சோப்ரா தற்போது நடித்துள்ளார்.
மேரிகோம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு பிரபல குத்துச்சண்டை வீரர் ஒருவரிடம் முறையான பயிற்சி எடுத்ததோடு, சண்டை காட்சிகளில் நடித்தபோது அவரை தன் கூடவே வைத்திருநதார் பிரியங்கா. அப்படி நடித்தபோது ஒருதடவை விபத்திலும் சிக்கினார் அவர். காலில் பலத்த அடிப்பட்டதை அடுத்து சில மாதம் ஓய்வுக்குப்பிறகு மீண்டும் நடித்தார்.
அப்படி பிரியங்கா சோப்ராவின் கடின உழைப்பில் உருவான மேரிகோம் படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டது. இதனால் சில தினங்களுககு முன்பு அப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. அதை ரசிகர்களை விட சினிமா பிரபலங்களே ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததால், இப்போது டீஸரைப்பார்த்து விட்டு பல நட்சத்திரங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதில் சமந்தா, மேரிகோம் படத்தின் பிரியங்கா சோப்ராவின் நடிப்பைப்பார்த்து கண்கலங்கி விட்டேன். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரத்திற்காக அவர் தனது உழைப்பை அர்ப்பணித்துள்ளார் என்று தனது டுவிட்டரில் மேரிகோம் டீஸர் பற்றி கருத்து வெளியிட்டுள்ளார்.