தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒளிப்பதிவாளர் ஜீவன் இயக்கி வரும் படம் மொசக்குட்டி. மைனா, சாட்டை படங்களை தயாரித்த ஜான் மேக்ஸ் ஸ்டூடியோ தயாரிக்கிறது. சாட்டை படத்தில் நடித்த மகிமாதான் ஹீரோயின். வீரா என்ற புதுமுகம் ஹீரோ. இவர்கள் தவிர பசுபதி, செண்ட்ராயன், ஜோமல்லூரி நடிக்கிறார்கள். ரமேஷ் விநாயகம் இசை அமைக்கிறார். மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மைனா படப்பிடிப்பு நடந்த குரங்கிணி பகுதியிலேய படப்பிடிப்பு நடந்து வந்தது. தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இன்றும் ஒரு சில நாட்களில் பாடல்களை வெளியிடுகிறார்கள்.
"கிராமத்தில் மொசக்குட்டி மாதிரி இருக்கிறவன் எப்படி புலிக்குட்டியாக மாறுறான்னு ஈசியா இந்தப் படத்தோட கதையை ஒரு வரியில சொல்லிடலாம். படத்தின் பலமே திரைக்கதைதான். விருப்பமே இல்லாமல் கதை கேட்ட பசுபதி இந்தப் படத்துல ஒரு இணை இயக்குனரா வேலை செய்திருக்கிறார்.நானே காமெடி சீன் எழுதிக்கிறேன்னு சொன்ன எம்.எஸ்.பாஸ்கர் கதைக்குள்ள காமெடி இருக்கு அதுவே போதும்னு சொன்னார். ஹீரோயின் மகிமா சம்பளமே வேண்டாமுன்னு சொல்லி நடிக்கிறாங்க. ஒளிப்பதிவாளர் சுகுமார் கதை கேட்டுட்டு அவரும் இயக்குனர் மாதிரி உழைக்கிறார். இப்படி எல்லாமே பாசிட்டிவா வந்திருக்கு. படம் இறுதி கட்டத்துல இருக்கு. கிராமத்து வாசனையை அதன் ஒரிஜினாலிட்டி கெடாமல் தரப்போறோம்" என்கிறார் ஜீவன்.