பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படம் குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் |
குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் ஜெனிபர். கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டவர். குழந்தை நட்சத்திரமான ஜெனிபர், பிறகு குமரி நட்சத்திரமாகி சில படங்களில் நடித்தார். ஆனாலும் பிஸியான நடிகையாக அவரால் வர முடியவில்லை. எனவே சின்னத்திரைக்குப் போய் அங்கே பல தொடர்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி நடன நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று நடனமாடி வந்தார்.
இந்நிலையில், கல்கண்டு என்ற படத்தில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார் ஜெனிபர். நாகேஷின் பேரனும், ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ் நடிக்கும் கல்கண்டு படத்தில் ஜெனிபருக்கு முழுநீள நகைச்சுவை வேடத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நந்தகுமார். இவர் விஜயகாந்தை வைத்து தென்னவன், பிரசாந்தை வைத்து ஜாம்பவான் ஆகிய படங்களை இயக்கியவர். கல்கண்டு படத்தில் மற்றொரு சிறப்பு...கல்கண்டு படத்தின் கதாநாயகி டிம்பிள்சோப்டே! இவர் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர். வீர சிவாஜியின் படைத்தளபதியாக பணியாற்றிய ஒருவரின் பரம்பரையைச் சேர்ந்தவராம் டிம்பிள்சோப்டே.