விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
பாரதிராஜா இயக்கிய பல படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியவர் கே.பாக்யராஜ். அதன்பிறகுதான் அவர் ஹீரோவானார். அந்த வகையில், சமீபகாலமாக சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வரும் பாக்யராஜ், தனது மகன் சாந்தனுவை வைத்து இயக்கிய சித்து ப்ளஸ்-2 தோல்வியடைந்து விட்டதால் அதையடுத்து படம் இயக்கும் முயற்சியில் இறங்கவில்லை.
ஆனால், இப்போது துணை முதல்வர் என்ற படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை மத்திய சென்னை என்ற படத்தை இயக்கிய விவேகானந்தன் இயக்குகிறார். இந்த படம் முழுக்க முழுக்க இன்றைய அரசியலை கிண்டல் செய்யும் வகையில் உருவாகிறதாம்.
ஆனால், அதையே ஆக்ரோஷமாக சொன்னால் ஆபத்தாகி விடும் என்பதால், காமெடியாக சொல்கிறார்களாம். அதனால்தான் மலையாள நடிகர் ஜெயராமையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு காமெடி கூட்டணி அமைத்துள்ள பாக்யராஜ், மலையாள நடிகைகளான ஸ்வேதாமேனன், சந்தியா ஆகிய இருவரையும் கதாநாயகிகளாக்கியிருக்கிறார்.
இந்திய அளவில் திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்துள்ள பாக்யராஜை சில படங்கள் சறுக்கி விட்டபோதும், இந்த படம் தன்னை மீண்டும் பழைய பாக்யராஜாக தலைநிமிர வைக்கும் என்று எதிர்பார்க்கும் அவர், சரியான நேரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்ற முயற்சிகளில் இருக்கிறார். மேலும், மலையாள படங்களில் படுகவர்ச்சியாக நடித்து சர்ச்சைகளை சந்தித்த ஸ்வேதா மேனனை கேரளா பாணியிலேயே உடையணிந்து நடிக்க வைத்திருப்பவர், தனது முருங்கக்காய் கசமுசா போன்று இந்த படத்தில் புதுமாதிரியான இன்னொரு வடிவில் சில்மிசங்களை வெளிப்படுத்தியிருக்கிறாராம். ஆக, துணை முதல்வர் அரசியல் படம் என்றாலும், தனது குசும்பான பஞ்ச்களையும் ஆங்காங்கே துவி விட்டிருக்கிறாராம் பாக்யராஜ்.