Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'உத்தம வில்லன்' - அக்டோபர் 2 ரிலீஸ்...?

24 ஜூலை, 2014 - 10:17 IST
எழுத்தின் அளவு:

கமல்ஹாசன் நடித்து முடித்த 'விஸ்வரூபம் 2' எப்போது வரும் என்று அவர்களே உறுதியாக சொல்லாத நிலையில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹசான், ஆன்ட்ரியா, பூஜா குமார் மற்றும் பலர் நடித்துள்ள 'உத்தம வில்லன்' திரைப்படம் அக்டோபர் 2ம் தேதியன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


எப்போதுமே கமல்ஹாசன் ஒரு சீரியசான படம் ஒன்றில் நடித்தால் அதற்கடுத்து நகைச்சுவை கலந்த 'லைட்டான' படம் ஒன்றில் நடிப்பது வழக்கம். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'விஸ்வரூபம்' படம் மிகவும் சீரியசான கதை கொண்ட படமாக இருந்ததால், தொடர்ந்து 'விஸ்வரூபம் 2' படத்தை வெளியிடுவதையும் அவர் தவிர்த்திருக்கலாம் என்கிறார்கள். அதனால்தான் 'உத்தம வில்லன்' படத்தில் குறுகிய காலத்தில் நடித்து முடித்து படத்தை வெளியிட முடிவு செய்ததாகவும் சொல்கிறார்கள்.


'உத்தம வில்லன்' படத்தில் இந்தக் கால நடிகராகவும், எட்டாம் நூற்றாண்டு கலைஞராகவும் கமல்ஹாசன் நடித்துள்ளார். சினிமாவில் உள்ள சில பழக்க, வழக்கங்களையும், திரை மறைவில் நடக்கும் சில விஷயங்களையும் இந்தப் படத்தில் கிண்டலடித்திருப்பதாகவும் பேச்சு எழுந்துள்ளது. படத்தின் டீசரை சில வாரங்களுக்கு முன் வெளியிட்டு உடனே அதை திரும்பப் பெற்று விட்டார்கள். இதனால் எழுந்த தேவையற்ற சர்ச்சையை நீக்கும் வகையில் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்தலாம் என்றும் யோசித்து வருகிறார்களாம். அநேகமாக அடுத்த மாதம் இசை வெளியீடு நடக்கலாம் என்றுத் தெரிகிறது. 'உத்தம வில்லன்' தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in