கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
தமிழில் 'த்ரிஷ்யம்' படம் ரீமேக் ஆக சில தடைகள் நிலவி வரும் சூழ்நிலையில், மலையாளத்தில் பெரும் வசூலைத் குவித்த 'த்ரிஷ்யம்', தொடர்ந்து கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெற்றியையும் வசூலையும் குவித்து வருகிறது. மற்ற மொழிகளில் தயாரான போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத சூழ்நிலையில் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடிப்பதாலேயே இந்தப் படத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் வரை சென்று தடைபெறுவதாகக் கூறப்படுகிறது. தமிழில் கமல்ஹாசன் நடித்து வெளியாகும் பட்சத்தில் படத்திற்கு மிகப் பெரும் வசூல் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள். அதைக் கருத்தில் கொண்டே தற்போது 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கிற்கு சிலர் பிரச்சனையை ஏற்படுத்துவதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
இதனிடையே பத்து நாட்களுக்கு முன் தெலுங்கில் வெளியான 'த்ரிஷயம்' திரைப்படம் உலக அளவில் சுமார் 13 கோடி ரூபாயை வசூல் செய்து கொடுத்துள்ளதாம். ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் 10 கோடி ரூபாயும், மற்ற மாநிலங்கள், மற்ற நாடுகள் என்ற வகையில் சுமார் 3 கோடி ரூபாயும் வசூல் கிடைத்துள்ளதாம். வரும் வாரங்களில் இந்த வசூல் தொகை கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், தொலைக்காட்சி உரிமை மற்றும் சில வியாபாரங்களால் மேலும் சில கோடிகள் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள். மலையாளம், கன்னடத்தில் பெற்ற வெற்றியும், வசூலும் தெலுங்கில் இல்லை என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். ஆனாலும், படத்தின் பட்ஜெட் குறைவாக இருப்பதால் தயாரிப்பாளருக்கும், வாங்கியவர்களுக்கும் கை நிறைய லாபம் கிடைப்பது உறுதியாம்.