இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
வைதேகி காத்திருந்தாள் படத்தில் நடித்த பிரமிளாவின் மகள் மேக்னா. தமிழில் காதல் சொல்ல வந்தேன், நந்தா நந்திதா, உயர்திரு 420 படங்களில் நடித்தார். பி.வாசு மகன் ஷக்தியுடன் நடித்த கள்ளசிரிப்பழகா இன்னும் வெளிவரவில்லை என்றாலும் மலையாளம் மற்றும் கன்னட படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
கன்னடத்தில் மேக்னா நடித்து விரைவில் வெளிவர இருக்கும் பாகுபராக் என்ற படம் மிகுந்த எதிர்பார்ப்பபை ஏற்படுத்தி உள்ளது. சுனில் குமார் இயக்கி உள்ளார். சிரிங்கர் கிட்டி ஹீரோ. இது ஒரு ஆக்ஷன் திரில்லர் படம். இதில் மேக்னா இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். பைக் ஓட்டுவது, சிகரெட் பிடிப்பது என்று இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமராகவும் நடித்துள்ளார். இதன் டீசரும், விளம்பரங்களும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் படத்தின் ரிலீசிற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.