ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கெளதம். நடிகர் கார்த்திக்கின் மகன் என்பதால் இவர் மீது மற்ற புதுமுக நடிகர்களை விட எதிர்பார்ப்புகள் அதிகம்தான். ஆனபோதும், அவற்றை பூர்த்தி செய்யக்கூடிய கதைகள் கெளதமுக்கு அமையவில்லை. அவர் நடித்து வெளியான இரண்டு படங்களுமே தோல்வியடைந்ததோடு, அவர் நடிப்பும் பேசும்படியாக இல்லை. இதனால், மார்க்கெட்டில் இருக்கிற இடமே தெரியாமல் இருக்கிறார் கெளதம்.
இருப்பினும் தனது மகனுடன் அறிமுகமான விக்ரம் பிரபு நடித்த கும்கி, அரிமா நம்பி போன்ற படங்கள் பேசப்பட்டு அவர் மார்க்கெட்டில் பேசப்படும் நடிகராகி விட்டதால், அவரைப்போன்று தனது மகனையும் வளர்த்துக்கொண்டு வரவேண்டும் என்று தற்போது களத்தில் வரிந்து கட்டிக்கெண்டு நிற்கிறார் கார்த்திக்.
தற்போது வை ராஜா வை, சிப்பாய், இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்து வரும் கெளதமுக்கு, இந்திரஜித் ஆக்சன் கதையாக அமைந்துள்ளதாம். அதனால் இந்த படத்தில் கெளதமின் தனித்திறமையை கொண்டு வர வேண்டும் என்பதற்காக, அவருக்கு அதிக உற்சாகம் கொடுத்து நடிக்க வைத்து வரும் கார்த்திக், இந்த படத்தில் அஜீத்தின் பில்லா-2வில் வில்லனாக நடித்த சுதன்சு பாண்டே வில்லனாக நடிப்பதால், இது கெளதமுக்கு மிகப்பெரிய ஆக்சன் படமாக அமையும் என்று கூறி வருகிறார். அதோடு, சண்டை காட்சிகளில் கெளதமின் நடிப்பு பளிச்சிட வேண்டும் என்பதற்காக, அவருக்கு ஒரு பைட் மாஸ்டரை நியமித்து பல மாதங்களாக பயிற்சி கொடுத்து இப்போது களத்தில் இறங்கி விட்டிருக்கிறார். ஆக, அப்பா பாணியில் நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்வதை குறைத்து விட்டு, வில்லன்களுடன் குஸ்தி போடுவதில் அதிக ஈடுபாடு காட்டத் தொடங்கியிருக்கிறார் கெளதம்.
Tags- mani rathnam. karthic. goutham. ajith. indirajith. vai raja vai. kadal. fight master. vikram prabu.
மணிரத்னம், கார்த்திக், கெளதம், அஜீத், இந்திரஜித், வை ராஜா வை, கடல், பைட் மாஸ்டர், விக்ரம் பிரபு.