சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
'அஞ்சான்' இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்ற போது, சூர்யாவைக் குளிர்விப்பதற்காக பேசிய சிலர் அவரை 'இந்தியாவின் சூப்பர் ஸ்டார்' என அழைத்தனர். மைக் கிடைத்தால் போதும், எதை வேண்டுமானாலும் பேசி விடலாம் என திரைப்பட விழாக்களில் பலர் இப்படித்தான் பேசி வருகின்றனர். சில காலம் முன் வரை 'வருங்கால முதல்வர்' என்ற பேச்சு இருந்தது. இப்போது 'சூப்பர் ஸ்டார்' யார் என்பது பற்றிய பேச்சுத்தான் அதிகமாக ஒலிக்கிறது.
கடந்த பல வருடங்களாகவே இந்திய அளவில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி ஆகியோர்தான் அவரவர் மொழிகளில் சூப்பர் ஸ்டார்களாக அழைக்கப்பட்டு வருகின்றனர். சமீபகாலமாக சல்மான் கான் மட்டும்தான் இந்திய அளவில், ஏன் உலக அளவில் கூட, ஹிந்திப் படங்கள் மூலம் அதிக அளவில் வசூலைப் பெற்றுத் தரும் நாயகனாக விளங்கி வருகிறார். அப்படிப் பார்க்கப் போனால் அவர்தான் இப்போது இந்தியாவின் சூப்பர் ஸ்டார்.
அவருடைய வசூல் தொகையைத் தொட ஆமீர் கான், ஷாரூக் கான், ஹிரித்திக் ரோஷன் மற்றும் பல முன்னணி ஹீரோக்கள் கடுமையாக முயற்சி செய்து வருகிறார்கள். உலக அளவில் மிகப் பெரும் மார்க்கெட்டாக விளங்கும் இந்தித் திரையுலக ஹீரோக்களே சல்மான்கானை தொட முடியாத அளவிற்கு இருக்கும் போது, இப்போது சூர்யாவை இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என அழைப்பது எப்படி பொருத்தமாக இருக்கும் என சிலர் கேட்கின்றனர். கடந்த நான்கு வருடங்களில் சல்மான் கான் நடித்த படங்கள் உலக அளவில் வசூலித்த தொகை சுமார் 1000 கோடிக்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். அவர் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் 'கிக்' படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பும், மிகப் பெரிய வியாபாரமும் இருக்கிறது.
சரி...உதாரணத்திற்கு 'யு டியூப்' ஹிட்ஸ் விஷயத்திற்கே வருவோம். 'அஞ்சான்' படத்தின் யு டியூப் ஹிட்ஸ் 20 லட்சத்தைத் தொட்டதற்கே விழா கொண்டாடினார்கள். ஆனால், 'கிக்' படத்திற்கு இதுவரை சுமார் 1,50,00,000 ஹிட்ஸ் கிடைத்திருக்கிறது. அப்படியென்றால் அவர்கள் எப்படிப்பட்ட விழாவைக் கொண்டாட வேண்டும். இப்போது சொல்லுங்கள் 'இந்தியாவின் சூப்பர் ஸ்டார்' யார் என்று ?