இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, வந்தான் வென்றான் படங்களை இயக்கிய கண்ணன் தற்போது இயக்கி வரும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இதில் விமல், சூரி, ப்ரியா ஆனந்த் நடிக்கிறார்கள். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். விமலின் மஞ்சப்பையும், ப்ரியா ஆனந்தின் அரிமா நம்பியும் ஹிட்டாகி இருப்பதால் இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
பட்டத்துயானை படத்தில் இழந்த நஷ்டத்தையும் இந்தப் படத்தில் ஈடுகட்ட நினைக்கும் மைக்கேல் ராயப்பன், படத்தின் விலையை உயர்த்தி விட்டார். விமல், சூரியின் காமெடி கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, படங்களில் ஒர்க் அவுட் ஆனது போல் இந்தப் படத்திலும் காமெடி நன்றாக வந்திருப்பதாக பேச்சு இருக்கிறது. இதனால் ரெண்டு ராஜாக்களின் வியாபார மதிப்பும் உயர்ந்திருக்கிறது. படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. லட்சுமி மேனன் பாடிய பாடலுக்கு இனியா ஆடும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.