ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜெயம் கொண்டான், மோதி விளையாடு உள்பட பல படங்களில் நடித்தவர் வினய். தற்போது இவர் நடித்துள்ள 'சேர்ந்து போலாமா' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த படம் முழுக்க முழுக்க நியூசிலாந்தில் எடுக்கப்பட்டது. இவருக்கு ஜோடியாக மதுரிமா நடித்தார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நியூசிலாந்து நடந்தபோது "மதுரிமா ஒழுங்காக படப்பிடிப்புக்கு வராமல் உள்ளூர் நண்பர்களுடன் ஊர் சுற்றினார்" என்று படத்தின் இயக்குனர் அனில்குமார் குற்றம் சாட்டினார். "டைரக்டர் திட்டமிட்டு படம் எடுக்காமல் சொதப்பினார்" என்று மதுரிமா கூறினார். இருவருக்கும் இடையிலான மோதலில் வினய் மதுரிமாவுக்கு சப்போர்ட் பண்ணியதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வினய் மதுரிமா இருவருமே வரவில்லை. வினய்க்கு திருமண நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடப்பதால் அவர் வரவில்லை என்று விழாவில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து அவரிடம் கேட்டபோது: "எனக்கு நிச்சயதார்த்தம் எதுவும் நடக்கவில்லை. வீட்டில் அம்மா தீவிரமாக பெண் தேடி வருகிறார்கள். மற்றபடி எதுவும் இல்லை. நான் சொந்த வேலை ஒன்றாக வெளியூர் பயணத்தில் இருப்பதால் 'சேர்ந்து போலாமா' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. மதுரிமாவை படப்பிடிப்பில் பார்த்ததுதான், அதன் பிறகு சந்திக்கவும் இல்லை. பேசவும் இல்லை" என்றார்.