Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யாவுக்காக 3 கதைகளை தூக்கிப்போட்டேன்! -சொல்கிறார் லிங்குசாமி

21 ஜூலை, 2014 - 14:29 IST
எழுத்தின் அளவு:

சிங்கம்-2 படத்திற்கு பிறகு அதிரடியான ஆக்சன் கதைகளில் மட்டுமே நடிப்பது என்ற முடிவில் இருந்தார் சூர்யா. சீன் பை சீன் ஆக்சன் அனல் தெறிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கெளதம்மேனன் உள்ளிட்ட சில டைரக்டர்கள் சொன்ன கதைகள் அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படியாக இல்லை. அதனால்தான், இழுத்தடிக்காமல் கதையை மாற்ற சென்னார்.


அதற்கு கெளதம்மேனன் உடன்படாததால், அடுத்து சீமானிடம் கதை கேட்ட சூர்யா அதுவும் பிடிக்காததால், லிங்குசாமி பக்கம் தாவினார். ஏற்கனவே அவர் ரன், சண்டக்கோழி என பல ஆக்சன் படங்களை கொடுத்தவர் என்பதால், அவரிடம் அதிக நம்பிக்கையோடு கதை கேட்டார் சூர்யா. ஆனால் அப்படி அவர் சொன்ன கதையும் சூர்யாவுக்கு பிடிக்கவில்லை.


அதற்காக அவரை விடவில்லை லிங்குசாமி. அடுத்தடுத்து மேலும் இரண்டு கதைகள் சொன்னார். அதிலும் சூர்யா உடன்படவில்லை. அதையடுத்துதான் அஞ்சான் கதையை சொன்னார். தாதாயிசத்தை தழுவியக்கதை என்பதால் உடனே ஓ.கே சொன்ன சூர்யா, இப்போது அப்படத்திலும் நடித்து முடித்து விட்டார்.


இதுபற்றி லிங்குசாமி கூறுகையில், எனது படங்களில் அஞ்சான் ரொம்ப புதுசாக இருக்கும். முதலில் நான் சொன்ன மூன்று கதைகளை தவிர்த்தார் சூர்யா. அதனால் அந்த கதைகளை தூக்கிப்போட்டு விட்டேன். அதையடுத்து சொன்ன அஞ்சான் அவருக்கு மட்டுமின்றி எனக்கும் ரொம்ப வித்தியாசமான கதைக்களமாகவே தெரிந்தது. இப்போது படப்பிடிப்பை முடித்த பிறகு பார்த்தால் படம் ரொம்ப பெரிய அளவில் வந்திருக்கிறது. இதற்கு முன்பு சூர்யா நடித்த சிங்கம், சிங்கம்-2 ஆகிய படங்களை மிஞ்சும் அளவுக்கு இந்த படத்தில் ஆக்சன் காட்சிகள் உள்ளது. அந்த வகையில் அஞ்சான் ஆக்சன் பிரியர்களுக்கு பெரிய தீனியாக இருக்கும் என்கிறார் லிங்குசாமி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in