Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தங்கச்சி கல்யாணத்துக்காக தங்கப்பதக்கத்தை விற்றேன்! மேடையில் கண்கலங்கிய டி.ஆர்!!

21 ஜூலை, 2014 - 14:19 IST
எழுத்தின் அளவு:

டைரக்டர் டி.ராஜேந்தர் தான் இயக்கும் படங்களில் எப்போது அண்ணன்-தங்கை பாசத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார். காரணம், நிஜவாழ்க்கையிலும் அவர் தனது தங்கச்சி மீது அளவற்ற பாசம் கொண்டவராம. அதனால்தான் தான் கல்லூரியில் படித்து வாங்கிய தங்க மெடலைகூட தங்கை கல்யாண செலவுக்காக விற்று விட்டாராம். இதை ஒரு சினிமா விழா மேடையில் சொன்ன டி.ஆர்., நிஜமாலுமே கண்கலங்கி விட்டார். நான் எதையும் நேருக்கு நேர் நெத்தியடியாக பேசக்கூடியவன். அதோடு, எந்த விசயமாக இருந்தாலும் அதில் யதார்த்தம் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால்தான் எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதையாக பண்ணுகிறேன்.


அந்த வகையில், தங்கைக்கோர் கீதம் படத்தில் தங்கைக்கு கல்யாணம் நடத்த கஷ்டப்படும் அண்ணனாக நடித்திருப்பேன். அது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்த நிஜசம்பவங்களோட கலவைதான். மேலும், என் தங்கைக்கு எப்படி எப்படியெல்லாம் நகை போட்டு கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேனோ அதையெல்லாம் ஒரு பாடலில், தங்க நிலவே உன்னை உருக்கி தங்கச்சிக்கு தங்க நகை செஞ்சிடவோ என்று பாடலைத் தொடங்கியிருப்பேன்.


அந்த படத்தைப்பார்த்த என்னைப்போன்ற எத்தனையோ அண்ணன்கள் அந்த படம் திரைக்கு வ்நதபோது தியேட்டர்களில் கண்கலங்கியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு செண்டிமென்ட் நமக்குள் ஊறி கிடக்கிறது. மேலும், சமீபகாலமாக ரசனை மாறி விட்டது என்று சொல்வதெல்லாம் உண்மையில்லை. இப்போதும் நாம் நாமாகவே இருக்கிறோம். என்னதான் பீட்சாவும், பர்கரும் சாப்பிட்டாலும், இன்னமும் நமக்குள் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்ற பாச உணர்வுகள் அப்படியேதான் இருக்கிறது. அதனால் இப்போதும நல்ல பேமிலி செண்டிமென்டான படங்களை இயக்கினால் கண்டிப்பாக ஓடும்.


அதனால்தான், தற்போது நான் நடித்து வரும் ஒரு தலைக்காதல் படத்தில்கூட காதலுடன் பேமிலி செண்டிமென்டையும் கலந்து கதை பண்ணியிருக்கிறேன் என்று பேசிய டி.ஆர்., இந்த படத்திலும் பாசமிக அண்ணன் வேடத்தில் நான் நடித்து வருகிறேன் என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in