ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்த மங்கிலீஸ் படமும், அவரது மகன் துல்கர் சல்மான் நடித்த விக்ரமாதித்தியன் படமும் ரம்ஜான் பண்டிகையன்று ஒரே நாளில் வெளியாகி மோதுகின்றன. தமிழ் நாட்டில் பொங்கல், தீபாவளி போன்று கேரளாவில் ஒணம் மற்றும் ரம்ஜான் பண்டிகை அன்று திரைப்படங்கள் வெளிவரும். இந்த ஆண்டு தந்தையும் மகனும் மோதும் படத்தை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மலையாள ரசிகர்கள்.
மங்கிலீஸ் படத்தில் மம்முட்டியுடன் பகத் பாசில், ஸ்ரீந்தா நடித்துள்ளனர். சலாம் பாபு இயக்கி உள்ளார். விக்ரமாதித்தியன் படத்தில் துல்கருடன் உன்னி முகுந்தனும், நமீதா பரமோத்தும் நடித்துள்ளனர். லால் ஜோஸ் இயக்கி, தயாரித்துள்ளார்.
தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் துல்கரும், சமீபகாலமாக தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் மம்முட்டியும் ரம்ஜானில் மோதுவதை ஆர்வத்துடன் கவனித்து வருகிறது மலையாள சினிமா.