பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இன்று வெளியாகி இருக்கும் சதுரங்க வேட்டை ஒரு மோசடிபேர்வழியைப் பற்றிய கதை. பாலிவுட்டில் பிரபல ஒளிப்பதிவாளராக விளங்கும் நட்ராஜ் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டிருப்பதால் மிகப்பெரிய அளவில் விளம்பரங்களை செய்தனர். எனவே சதுரங்க வேட்டை படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்திருக்கிறது.
சதுரங்க வேட்டை படத்தில் பிரதான வில்லனாக வளவன் என்பவர் நடித்திருக்கிறார். இவர் ஏற்றிருக்கும் வில்லன் கதாபாத்திரம் சீமானை நினைவுபடுத்துவதுபோல் உள்ளதாக சொல்கின்றனர் படத்தை பார்த்தவர்கள். பிற மொழிக்கலப்பு இல்லாமல் சுத்தமான தமிழில் பேசுகிறவர் சீமான். சதுரங்க வேட்டை படத்தில் வளவன் ஏற்றுள்ள வில்லன் பாத்திரம் சுத்தமான தமிழ் பேசுகிறவராக அமைக்கப்பட்டிருக்கிறது. இடையே இடையே கூட்டம் இருக்கிறது. அதற்கு ஆட்களை திரட்ட வேண்டும் என்றெல்லாம் வசனங்களை வைத்து அரசியல் டச்சும் கொடுத்திருக்கிறார்கள். சுத்தமான தமிழ் பேசுகிற அப்பாத்திரத்துக்கும் அச்சு அசலாக சீமானை குறிப்பதுபோலவே உள்ளதாக சொல்கிறார்கள்.