டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அபிராமி மெகா மால் உரிமையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான அபிராமி ராமநாதன் ஏற்கனவே மாயாவி மாரீசன் உட்பட சில தொலைக்காட்சித் தொடர்களை தயாரித்து இருக்கிறார். தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவ ரகசியம் என்ற தொடரை தயாரிக்கிறார். இந்த தொலைக்காட்சித் தொடரின் துவக்கவிழா நேற்று அபிராமி மெகாமாலில் நடைபெற்றது. லிங்குசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அவ்விழாவில் அபிராமி ராமநாதன் பேசும்போது ஒரு தகவலைச் சொன்னார்..
தியேட்டர் அதிபராக ஏகப்பட்ட பணத்தை சம்பாதித்த நான் அதை செலவு செய்யத் தெரியாமல் படம் எடுக்க போனேன். நான் எடுத்தது படம் தமிழ்ப்படம் அல்ல. ஹாலிவுட் படம் என்று பேச்சை நிறுத்தி சஸ்பென்ஸ் வைத்தவர் பிறகு தொடர்ந்து பேசும்போது புதிரை அவிழ்த்தார். அமெரிக்க நிறுவனத்துடன் பார்ட்னர்ஷிப்பில் அந்த ஹாலிவுட் படத்தைத் தயாரித்தேன். அந்தப் படம்...ரஜினி காந்த் நடித்த ப்ளட் ஸ்டோன். என்று அவர் சொன்னபோது பலருக்கும் ஆச்சர்யம்! காரணம்..ப்ளட் ஸ்டோன் படத்தைத் தயாரித்தவர் அசோக் அமிர்தராஜ்! அபிராமி ராமநாதனோ அப்படத்தை தான் தயாரித்ததாகச் சொல்ல... பிறகு அவரது பேச்சிலிருந்தே விளக்கத்தை அறிய முடிந்தது.
அமெரிக்க நிறுவனத்துடன் தயாரித்த நான் அந்தப் படத்தைத் நம் ஊரில் ரிலீஸ் பண்ணினேன். அமெரிக்க கம்பெனி மற்ற நாடுகளில் ரிலீஸ் பண்ணினார்கள். இங்கே ரிலீஸ் பண்ணி கிடைக்கும் லாப நஷ்டம் எனக்கு. வெளிநாடுகளில் கிடைக்கும் லாப நஷ்டம் அவர்களுக்கு என்பதுதான் அக்ரிமெண்ட். நம்ம நேரம்.. வெளிநாடுகளில் நன்றாக ஓடிய ப்ளட் ஸ்டோன் படம் இங்கே சரியாக ஓடவில்லை. கையைக் கடித்துவிட்டது என்றார்.