சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் |
ஏ.எல். விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படம் மூலம்தான் தமிழுக்கு வந்தார் எமி ஜாக்சன். ஹாலிவுட் கவர்ச்சிப்புயலான இவர், அதற்கு முன்பெல்லாம் அங்குள்ள திரைப்படங்கள் மட்டுமின்றி, மாடலிங் துறையில் கொடிகட்டிப்பறந்தவர். அதிலும் இவர் ஆடையின்றி நடித்த சில விளம்பரப்படங்கள் ஹாலிவுட்டையே பற்றி எரிய வைத்தது. அந்த அளவுக்கு ஹாட் பீட்டாக திகழ்ந்தவர் எமி.
அப்படிப்பட்டவரை மதராசப்பட்டினம் படத்தில் துளியும் விரசமில்லாமல் போர்த்திக்கொண்டு நடிக்க வைத்தார் டைரக்டர் விஜய். ஹாலிவுட் பெண்ணாக இருந்தபோதும், அவரது பர்பாமென்ஸ் தமிழ் பெண்களுக்கு உரிய உணர்ச்சிகளை பிரதிபலித்தது. அதனால் அதையடுத்து, விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக் மட்டுமின்றி தாண்டவம் படத்திலும் நடித்த எமி, தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் ஐ படத்தில் விக்ரமுடன் நடித்துள்ளார். இதையடுத்து, சூர்யா நடிக்கும் ஒரு படத்தில் அவர் நடிக்கயிருக்கிறார்.
இந்நிலையில், எமி ஜாக்சன், லண்டனில் உள்ள மாடலிங் ஏஜன்சி ஒன்றுக்காக மேலாடையின்றி மாடலாக போஸ் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். வெள்ளை நிற கருப்பு கட்டம் போட்ட பேண்ட் அணிந்து, தலையில் ஒரு தொப்பியுடனும், மேலாடை எதுவும் இன்றி கைகளை வைத்து மறைத்தபடி போஸ் கொடுத்துள்ள படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.