Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குஷ்புவுக்கு, கருணாநிதி கொடுக்கப்போகும் முக்கிய பதவி!

23 ஏப், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

பெண்களின் கற்பு பற்றி ‌பேசி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை குஷ்புவுக்கு, முதல்வர் கருணாநிதி அரசியலில் மிகமுக்கிய பதவியை கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணத்துக்கு முன்பு ஆணும், பெண்ணும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது கர்ப்பமாகாமல் பார்த்துக் கொண்டால் தவறு இல்லை, என்று சர்ச்சைக்குரி கருத்தினை சொல்லி தமிழக மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தவர் நடிகை குஷ்பு. இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட் குஷ்புவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் இனி செக்ஸ் பற்றி எனது இஷ்டத்துக்கு கருத்து சொல்வேன், என்று கூறியிருக்கும் குஷ்பு, தற்போது கலைஞர் டி.வியின் பிரதான நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வருகிறார்.

இந்தநிலையில்தான் குஷ்புவுக்கு அரசியிலில் மிக முக்கிய பதவியை கொடுக்க முதல்வர் கருணாநிதி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் புதிதாக அமையவுள்ள தமிழக மேல்சபையில் கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கும் கணிசமாக பிரதிநிதித்துவம் கொடுக்க முடிவு செய்திருக்கும் முதல்வர் கருணாநிதி, குஷ்புவுக்கு எம்.எல்.சி. பதவியை கொடுக்கப் போகிறாராம். இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளிவராவிட்டாலும், அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் அரசல் புரசலாக பேசிக் கொள்கிறார்கள். குஷ்பு தவிர மேலும் சில நட்சத்திரங்களுக்கும் பொறுப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்‌கனவே நடிகை குஷ்புவுக்கு நடிகர் நல வாரியத்தில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எதுவாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே நம்புவோம்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Arumugam - Paris,பிரான்ஸ்
27 ஜூன், 2013 - 19:14 Report Abuse
Arumugam கடந்த தேர்தலில் தி.மு.க அடைந்த படுதோல்விக்கு முக்கிய காரணமே குஷ்புவை அக்கட்சியில் சேர்த்ததுதான் என்பதை இன்னுமா உணரவில்லை?
Rate this:
சந்திரசேகர் pp - salem,இந்தியா
05 ஜூலை, 2011 - 23:45 Report Abuse
 சந்திரசேகர் pp hallooo
Rate this:
"ராஜா " " - CHENNAI,இந்தியா
18 ஏப், 2011 - 15:10 Report Abuse
 அவருக்கு செக்ஸ் கல்வி துறை என்று ஒன்று ஆரம்பித்து அதில் தலைவர் பதவி கொடுங்கள்
Rate this:
raja - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29 நவ, 2010 - 23:57 Report Abuse
 raja பதவி கொடுத்தாலும் கொடுப்பார்கள்// கட்சிக்கு ஒரு கவர்சிகன்னிவேண்டுமே//......
Rate this:
policedaan - TN02,இந்தியா
17 அக், 2010 - 05:19 Report Abuse
 policedaan குஷ்பூ முன்னாடி வேற எந்த தொழில் பண்ணியிருபாலோ?? நம்ம கலாச்சாரத கேவலபடுத்த வந்துருக்கா
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in