Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தம் அடிக்காததால்தான் தம் பிடித்து நிற்கிறேன்! -உடல் ஆரோக்யம் பற்றி டி.ராஜேந்தர்

16 ஜூலை, 2014 - 10:49 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் இந்த மாதிரியான படங்களை மட்டும்தான் இயக்குவேன் என்ற கொள்கையோடு படங்கள் இயக்கி வருபவர் டி.ராஜேந்தர். 34 வருடங்களுக்கு முன்பு ஒரு தலை ராகம் படத்தை இயக்கியவர், இப்போது ஒருதலைக்காதல் என்ற படத்தை இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்துக்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகியிருக்கும் அவர், இந்த படத்தையும் காதல், பேமிலி செண்டிமென்ட் என்று எனது பாணியில் இந்த காலகட்ட ரசிகர்களை மனதில் கொண்டு யூத்தாக இயக்கியிருக்கிறேன் என்கிறார்.


மேலும், என் படங்களில் எப்போதும் சமூகத்துக்கு தப்பான விசயங்களை சொல்லிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பேன். குறிப்பாக, தம் அடிப்பது, சரக்கு அடிப்பது, வன்முறை போன்ற காட்சிகள் அதிகமாக இருக்காது. அதேபோன்றுதான இந்த படத்தையும் இயக்கியிருக்கிறேன் என்று சொல்லும், டி.ராஜேந்தர், ஒரு காட்சியில் தம் அடிக்க வேண்டிய காட்சிகள் தேவைப்பட்டாலும் அதை நீக்கி விட்டாராம்.


காரணம், எனது முதல் படமான ஒரு தலை ராகத்திலேயே சந்திரசேகர் நடித்த கேரக்டரில் என்னைதான் எல்லோரும் நடிக்கச் சொன்னார்கள். ஆனால் அதில் தம் அடித்தபடி நடிக்க வேண்டும் என்பதால் நான் மறுத்து விட்டேன். சரக்கு அடிக்கிற காட்சியிலாவது தண்ணியை குடித்தபடி நடித்து விடலாம். ஆனால், தம் அடிக்க வேண்டுமென்றால் நிஜமாலுமே சிகரெட் பிடிக்க வேண்டும். அதனால்தான் அந்த கேரக்டரில் நான் நடிக்க மறுத்தேன் என்று கூறும் டி.ஆர்., நான் அப்படி சினிமாவிலும், நிஜத்திலும் தம் அடிக்காமல் இருப்பதினால்தான் இப்போதும தம் பிடித்து நிற்கிறேன். தம் பிடித்து பாடுகிறேன். ஆரோக்கியமாக இருக்கிறேன். இன்றைய இளவட்ட ஹீரோக்களுக்கு இணையாக என்னாலும் உடல் எடையை, குறைக்கவோ அதிகரிக்கவோ முடிகிறது என்றால் கெட்ட பழக்கவழக்கங்களை நான் நெருங்க விடாததுதான் காரணம் என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in