Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேசிய விருது பெற்றவருக்கு பாலா படத்தில் இடம் இல்லை!

16 ஜூலை, 2014 - 10:17 IST
எழுத்தின் அளவு:

பாலா கடைசியாய் இயக்கிய படம் - பரதேசி. இப்படம் கடந்த வருடம் வெளியானாலும் 2012 ஆம் வருடத்திலேயே தணிக்கை செய்யப்பட்டது. தணிக்கை செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே அரசாங்க விருதுகளுக்கு பரிசீலிக்கப்படுவதால், பரதேசி படம் 2012 ஆம் வருடத்தின் படமாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 2012 ஆம் வருடத்தின் சிறந்த ஆடை வடிமைப்பாளர் விருது பரதேசி படத்துக்கு கிடைத்தது. அப்படத்தின் ஆடை வடிமைப்பாளரான பூர்ணிமா ராமசாமி தேசிய விருது பெற்றார்.


பரதேசி படத்துக்கோ, அப்படத்தின் இயக்குநரான பாலாவுக்கோ, அதில் சிறப்பாக நடித்த அதர்வாவுக்கோ விருது கிடைக்காமல் ஆடை வடிவமைப்பாளரான பூர்ணிமாவுக்கு விருது கிடைத்தது பற்றி திரையுலகில் பலரும் ஆச்சர்யப்பட்டனர். அது மட்டுமல்ல, ஆடை வடிமைப்பில் எவ்வித அனுபவமும் இல்லாதவர் பூர்ணிமா ராமசாமி. தவிர, பரதேசி படம்தான் அவருக்கு முதல் படம். பிறகு எப்படி பூர்ணிமாவுக்கு தேசிய விருது கிடைத்தது? என்று படத்துறையில் பட்டிமன்றமே நடைபெற்று வந்தது.


பூர்ணிமா காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மருமகள் என்பது பலருக்கும் தெரியாது. ஒருவேளை, தெரிந்திருந்தால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்தான் தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தன் மருமகளுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்தார் என்று பேசி இருப்பார்கள்.


கடந்த கால கதைகள் இவ்வாறு இருக்க...நிகழ்கால கதைக்கு வருவோம். பரதேசி படத்தில் தேசிய விருது வென்ற பூர்ணிமா ராமசாமிக்கு, பாலா தற்போது இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் இடமில்லை. செல்வம் என்கிற வேறு காஸ்ட்யூமரை கமிட் பண்ணி இருக்கிறார் பாலா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in