Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சதுரங்க வேட்டை டீம் ஏற்படுத்திய வேட்டி பரபரப்பு!

15 ஜூலை, 2014 - 15:22 IST
எழுத்தின் அளவு:

விஜய் மில்டனின் உதவியாளர் வினோத் இயக்கியுள்ள படம் சதுரங்க வேட்டை. நட்டி, இஷாரா, இளவரசு, பொன்வண்ணன் நடித்திருக்கிறார்கள். வருகிற 18ந் தேதி படம் ரிலீசாகிறது. படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இண்டஸ்டரி ஏரியாவில் ஏற்பட்டிருக்கிறது. இதன் டிரைலரும் இணையதளத்தில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறது. இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் படத்தை நல்ல விலை கொடுத்து வாங்கியிருக்கிறது.


படத்தின் அறிமுக நிகழ்ச்சி ஒன்றை நேற்று (ஜூலை 14) சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு படம் சம்பந்தப்பட்ட அனைவரும் வேட்டி அணிந்து வந்தார்கள். ஹீரோயின் இஷாரா கூட ஒயிட் அண்ட் ஒயிட்டில் வந்தார். வேட்டி கட்ட மறந்து வந்தவர்களுக்கு ஓட்டல் அறையில் தயாராக வாங்கி வைக்கப்பட்டிருந்த வேட்டி வழங்கப்பட்டது.


சமீபத்தில் கிரிக்கெட் கிளப்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு வேட்டி கட்டிக்கொண்டு சென்ற நீதிபதி, வழக்கறிஞரை கிளப் நிர்வாகம் உள்ளே அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சட்டசபையில்கூட அனல் பறக்கும் விவாதம் நடந்து வருகிறது. வழக்கறிஞர்கள் வேட்டி கட்டிக் கொண்டு நீதிமன்றம் செல்கிறார்கள். அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான வேட்டியை அவமானப்படுத்துவதா என்று கொதித்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த நிலையில் படக்குழுவினர் அனைவரும் வேட்டி கட்டி வந்தது. கிளப் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகத்தான் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் கலைஞர்களின் தமிழ் பற்றை நினைத்து நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.


நிகழ்ச்சி தொடங்கியதும் பேசத் தொடங்கிய தொகுப்பாளினி "இங்கே ஏன் எல்லோரும் வேட்டி கட்டிக்கிட்டு வந்திருக்காங்க தெரியுமா. படத்தோட டிரைலரின் கடைசியில் ஒரு வசனம் வரும். அதுதான் படத்தின் கரு. அதற்காகத்தான் வேட்டி கட்டி வந்திருக்கிறார்கள்" என்றார்.


சதுரங்க வேட்டை பட டிரைலரின் இறுதியில் நான்கு பேர் வெள்ளை வேட்டி சட்டை அணிந்தபடி ஒரு காரில் சாய்ந்து நின்று கொண்டிருப்பார்கள். அதில் ஒருவர் "மாப்ளே இந்த ஒயிட் அண்ட் ஒயிட் போட்டுக்கிட்டாலே அடுத்தவனை ஏமாத்துறதுக்கு தனி தைரியம் வந்துடுது" என்கிறார்.


வெள்ளை வேட்டி சட்டையை பெருமைப்படுத்துகிறார்களா? சிறுமை படுத்துகிறார்களா? என்று கடைசி வரை புரியவில்லை.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in