மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் சரத்குமாரின் 60வது மணி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி அவருக்கு ஏராளமான திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர். மணி விழாவையொட்டி இன்று காலை கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் சிறப்பு யாகம் நடந்தது. சரத்குமாரும், ராதிகாவும் பங்கேற்று வழிபாடு நடத்தினார்கள். பின்னர் முதல்வர் ஜெயலலிதாவை கோட்டையில் குடும்பத்தோடு சென்று வாழ்த்து பெற்றார். தொடர்ந்து மதியம் திரையுலகினருக்கு நட்சத்திர ஹோட்டலில் விருந்து கொடுத்தார். அதில் கேயார், சுஹாசினி, லஸி, பிரியதர்ஷன், விக்ரம், அமீர், கார்த்திக், பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சரத்குமாரை வாழ்த்தினர். இவர்கள் தவிர ஏராளமான திரை நட்சத்திரங்கள் போனில் வாழ்த்து தெரிவித்தனர்.